| போலீசாரை  தாக்கிய குற்றவாளிக்கு வலை Dinamalar
போலீசாரை  தாக்கிய குற்றவாளிக்கு வலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 அக்
2019
05:26

சூலுார்:சூலுார் அருகே போலீசாரை தாக்கி, தப்பி சென்ற குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.சூலுார் அடுத்த அப்பநாயக்கன்பட்டி சேர்ந்தவர் பாண்டி, 40. இவர் மீது கருமத்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகள் உள்ளன. பல நாட்களாக தலைமறைவாக இருந்த அவரை போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில், அப்பநாயக்கன்பட்டியில் உள்ள மில்லில் மனைவியுடன் தங்கி இருப்பதாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மகேந்திரன், பெரியசாமி ஆகிய போலீஸ்காரர்கள் மில்லுக்கு விசாரணைக்கு சென்றனர்.போலீசார் வந்த தகவல் அறிந்து, பாண்டி தப்ப முயன்றார். பிடிக்க முயன்ற போலீசாரை தாக்கி விட்டு, அங்கிருந்து தப்பினார். சூலுார் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X