பிரபல பள்ளியில் ஒழுங்கீன ஆசிரியர்கள்: மாணவ - மாணவியர் அவதி; கல்வித்துறை வேடிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2019
05:10

சென்னை:பிரபல தனியார் பள்ளியில், ஆசிரியர்கள் சிலரின் ஒழுங்கீன நடவடிக்கைகளால், மாணவ - மாணவியர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.'வகுப்புகளை நடத்தாமல், ஓ.பி., அடிக்கும் ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளி நிர்வாகம் எச்சரித்துள்ளது.




கிழக்கு தாம்பரம், பாரத மாதா தெருவில், ஜெய்கோபால் கரோடியா தேசிய மேல்நிலைப் பள்ளி உள்ளது. பிரபலமான இந்த பள்ளி, தனியார் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் கீழ் இயங்குகிறது. இதன் கீழ், பல மெட்ரிக் பள்ளிகளும் செயல்படுகின்றன.'அடல் டிங்கரிங்'கடந்த, 1942ல், ஆர்.வெங்கடாச்சாரி என்ற சமூக ஆர்வலரால், இந்த பள்ளி துவங்கப்பட்டு, தமிழகத்தில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், முன்னணி பள்ளியாக விளங்குகிறது.




இந்த பள்ளி வளாகத்தில் நடந்துள்ள பல பொதுக் கூட்டங்களில், தேசிய அரசியல் கட்சி மற்றும் சமூக அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், பெரும் நிறுவனங்களிலும், அரசின் முக்கிய துறைகளிலும் பணியாற்றுகின்றனர்; பலர் வெளிநாடுகளில் பணியாற்றுகின்றனர்.இப்பள்ளிக்கு, அரசு உதவியை விட, முன்னாள் மாணவர்களும், கல்வி ஆர்வலர்களும் லட்சக்கணக்கில் செலவு செய்து, உள்கட்டமைப்பை நவீனமாக்கியுள்ளனர்.




மாணவர்களுக்கான அறிவியல் தொழிற்பயிற்சிக்கு, நவீனமான, 'அடல் டிங்கரிங்' ஆய்வகம், சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது.உடந்தைமாணவர்களிடம், குறைந்த கட்டணம் பெறுவதுடன், பெரும்பாலான மாணவர்களுக்கு, இங்கு இலவச கல்வியே வழங்கப்படுகிறது. இங்கு, அரசின் சம்பளம் பெறும், 39 ஆசிரியர்களும்; பள்ளி நிதியை சம்பளமாக பெறும், 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பணியாற்றுகின்றனர்.



இதில், அரசு சம்பளம் பெறும் ஆசிரியர்களில் சிலர், சங்கங்கள், ஜாதிய அமைப்புகள் மற்றும் தனிப்பட்ட அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, வேலை செய்யாமல், ஓ.பி., அடிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. பள்ளியில், தேசிய மாணவர் படையான, என்.சி.சி., வகுப்பை நடத்த விடாமல், சில ஆசிரியர்கள் தடுத்துள்ளனர்.பல லட்சம் ரூபாய் செலவில் திறக்கப்பட்ட, 'அடல் டிங்கரிங்' ஆய்வகத்தை, ஆசிரியர்கள் சிலர் முடக்கி வைத்துள்ளனர். இதற்கு, கல்வித் துறை அதிகாரிகளே உடந்தையாக இருப்பதாக கூறப்படுகிறது.




மறைமுக நெருக்கடி




சில ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடம் எடுக்காமல், 'பயோ மெட்ரிக்'கில் வருகையை பதிவு செய்து, பள்ளியில் இருந்து வெளியே சென்று, நேரத்தை வீணடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. மற்ற ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களையும், சங்கங்களின் பெயரில் மிரட்டி, பணி செய்ய விடாமல், அவர்கள் தடுப்பதாக கூறப்படுகிறது. இது போன்ற ஆசிரியர்களால், மாணவ - மாணவியர் கடும் பாதிப்படைந்துள்ளனர்.




இது குறித்து, கல்வித் துறையிடம், பள்ளி நிர்வாகம் புகார் அளித்துள்ளது.ஆனால், கல்வி அதிகாரிகள் சிலர், ஜாதி, மத ரீதியான காரணங்களை கூறி, ஒழுங்கீன ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், பள்ளி நிர்வாகத்துக்கு, மறைமுகமாக நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது. இதனால், ஒழுங்கீன ஆசிரியர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக உள்ள அதிகாரிகளின் பட்டியலை, பள்ளி நிர்வாகம், ஆதாரங்களுடன் திரட்டிஉள்ளது.




இது குறித்து, தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், முதன்மை செயலர், தலைமை செயலர், போலீஸ் கமிஷனர், டி.ஜி.பி., ஆகியோரிடமும், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திடமும் புகார் அளிக்க, பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.பாலியல் தொல்லைக்கு உடந்தை?மாணவியருக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் ஒருவர் மீது, 'போக்சோ' சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, பெற்றோர் புகார் அளித்துஉள்ளனர். ஆனால், நடவடிக்கை எடுப்பதில், கல்வி அதிகாரிகள் சிலர் முட்டுக்கட்டை போட்டுள்ளதுடன், பள்ளி நிர்வாகத்திடம், ஒழுக்கங்கெட்ட அந்த ஆசிரியருக்காக, பரிந்து பேசுவதாகவும் புகார் எழுந்துள்ளது.



மொத்தம், 3,000 மாணவ - மாணவியர் படிக்கும் இந்த பள்ளியில், 60 சதவீதத்துக்கும் மேல் மாணவியரும், ஆசிரியைகளும், பெண் ஊழியர்களும் உள்ளனர். அவர்களின் பாதுகாப்பையும், பெண் கல்விக்கான முக்கியத்துவத்தையும் தெரிந்து, கல்வித் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X