| இயற்கை சீற்றம்; தற்காத்து கொள்ள அறிவுரை Dinamalar
இயற்கை சீற்றம்; தற்காத்து கொள்ள அறிவுரை
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 அக்
2019
05:11

ஊட்டி:இயற்கை சீற்றம் ஏற்படும் போது நினைவில் வைக்க வேண்டிய அம்சங்கள் குறித்து மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது.நீலகிரி மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அறிக்கை:இடி மின்னலின் போது திறந்த நிலையில் உள்ள ஜன்னல்கள், கதவு போன்றவற்றின் அருகில் இருக்காதீர்கள்; இடி இடிக்கும் போது கண்டிப்பாக தொலைக்காட்சி பெட்டிக்கு வரும் கேபிளின் தொடர்பை துண்டித்து விடுங்கள்; சாய்ந்த மின் கம்பங்களுக்கு அருகில் நிற்க கூடாது.மேலும், மின் மாற்றியில் 'எரியிழை' போயிருப்பின் அதனை சரி செய்ய மின் ஊழியர்களிடம் தெரிவிக்கவும்; தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் நிற்பதையும், நடப்பதையும் தவிர்க்கவும்; ஈரமான கைகளோடு சுவிட்சை உபயோகப்படுத்த வேண்டாம்; உட்பட, 16 அம்சங்கள் குறித்து அறிவித்துள்ளது.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X