| கனமழை: சாலைகளில் பெருவெள்ளம்! Dinamalar
கனமழை: சாலைகளில் பெருவெள்ளம்!
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 அக்
2019
05:12

ஊட்டி:ஊட்டியில் பெய்த கனமழை காரணமாக, சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், டவுன்பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக, இரவு முழுவதும் கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஊட்டியில் நேற்று பகல் கனமழை கொட்டி தீர்த்தது. இதில், ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில் தண்ணீர் புகுந்ததால், போலீசார் பணி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டது.மேலும், முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக, படகு இல்லம் செல்லும் ரயில்வே பாலம் பகுதியில் தண்ணீர் தேங்கியதால், அரை மணிநேரம் டவுன் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும், சுற்றுலா வாகனங்கள் தண்ணீரில் சிக்கி செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.மழை ஓய்ந்து, தண்ணீர் வடிந்ததை அடுத்து, போக்குவரத்து சீரானது. இதனால், சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.இதேபோல, கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், கூக்கல் தொரை உட்பட சில இடங்களில் லேசான மண்சரிவு ஏற்பட்டது. கோத்தகிரி கிளப் ரோடு பகுதியில், 5 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து உடமைகள் சேதமடைந்தன.கோத்தகிரி கொணவக்கரை ஊராட்சி அட்டடி, மேல் கட்டபெட்டு, குமரன் காலனி, சன்சைன் நகர் மற்றும் கைத்தளா உள்ளிட்ட பகுதிகளில், மொத்தம், 19 வீடுகள் சேதமடைந்தன. பாதிக்கப்பட்டோருக்கு தலா, 4,100 ரூபாய், நிவாரணத்தொகை வழங்கப்பட்டது.மேலும், ஊட்டி--மஞ்சூர் கோரக்குந்தா சாலையில், சில இடங்களில் லேசான மண்சரிவு ஏற்பட்டது. குந்தா பாலம் பகுதியில், சாலையில் பாறை விழுந்ததால், மஞ்சூர்-ஊட்டி- குன்னுாருக்கான போக்குவரத்து இரவு வரை பாதிக்கப்பட்டது. கிராம மக்கள் தங்கள் பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.கனமழை காரணமாக, கெத்தை அணை திறக்கப்பட்டதால், பில்லுார் மற்றும் பரளி உள்ளிட்ட பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தொடர் மழையால் சில பகுதிகளில் மட்டும், சில மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X