| கூடலுாரில் நகை திருடியவர் கைது Dinamalar
கூடலுாரில் நகை திருடியவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 அக்
2019
05:12

கூடலுார்:கோத்தர்வயல் பகுதியை சேர்ந்த ஜமல்முகமது. ஸ்ரீமதுரை அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த, 5ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, வெளியூர் சென்று, 8ம் தேதி காலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டிலிருந்த 'லேப்-டாப்', நான்கு மொபைல் போன் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. கூடலுார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.எஸ்.ஐ., பிரகாஷ் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு, கூடலுார், ஈட்டிமூலா பகுதியை சேர்ந்த ராஜா, 57, என்பவரை, பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், ஆசிரியர் வீட்டில் காணாமல்போன பொருட்களும்; சில மாதங்களுக்கு செம்பாலா தேவராஜ் என்பவர் வீட்டிலிருந்து காணாமல் போன, எட்டு பவுன் நகைகளை திருடியது, இவர் தான் என, தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், பொருட்களை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X