| யானை தாக்கி எஸ்டேட் காவலாளி பலி Dinamalar
யானை தாக்கி எஸ்டேட் காவலாளி பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 அக்
2019
05:14

பந்தலுார்:கேரள மாநிலம் வயநாடு திருநெல்லி பகுதியை சேர்ந்தவர் மணி,45. இவர் மானந்தவாடி, அப்பபாறா தனியார் தோட்டத்தில் இரவு காவலராக பணியாற்றி வருகிறார்.நேற்று காலை, 6:00 மணிக்கு வேலை முடிந்து திரும்பி வந்தபோது, எஸ்டேட் சாலையில் நின்றிருந்த யானை தாக்கியது. இவரின் அலறல் சப்தம் கேட்டு, அருகிலிருந்தவர்கள், வந்து யானையை துரத்தி, பலத்த காயமடைந்த மணியை மானந்தவாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், கொண்டு செல்லும் வழியில், பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட மணியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கினர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X