போலீஸ் டைரி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2019
05:14

சத்தமாக பேசியதால் கத்திக்குத்து



கண்ணகிநகர்: கண்ணகிநகர், குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ராமராஜன், 35; ஆட்டோ ஓட்டுனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் விக்டர், 37. நேற்று முன்தினம் இரவு, விக்டரின் வீட்டுக்கு அருகே, ராமராஜன் நின்றுள்ளார். அப்போது, மொபைல் போனில், அவரது சகோதரி அழைத்துள்ளார். கோபத்தில் அவரிடம், ராமராஜன் சத்தம் போட்டு பேசியுள்ளார். அங்கு சென்ற விக்டர், மெதுவாக பேசுமாறு கூறியுள்ளார். இதில், இருவருக்கும் தகராறு ஏற்பட, ஆத்திரமடைந்த விக்டர், கத்தியால் ராமராஜனை குத்தி உள்ளார். பதிலுக்கு, ராமராஜனும், அவரது நண்பர்களும், விக்டரை தாக்கினர். கண்ணகி நகர் போலீசார் விசாரித்து, இரு தரப்பிலும், நான்கு பேரை நேற்று கைது செய்தனர்.



கொத்தனாருக்கு, 'போக்சோ'



செம்மஞ்சேரி: செம்மஞ்சேரியைச் சேர்ந்தவர் மகேந்திரன், 35; கொத்தனார். இவருக்கு, மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். மகேந்திரன், அதே பகுதியைச் சேர்ந்த, 11 வயது சிறுமிக்கு, மொபைல் போன் வாயிலாக, ஆபாச வீடியோவை காட்டி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியின் பெற்றோர், செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார், மகேந்திரனை பிடித்து விசாரித்தனர். அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, 'போக்சோ' சட்டத்தின் கீழ், போலீசார் அவரை, நேற்று கைது செய்தனர்.




கஞ்சா விற்ற சகோதரர்கள் சிக்கினர்




அண்ணா சாலை: அண்ணா சாலை காவல் எல்லைக்கு உட்பட்ட, அமீர் மஹால் பகுதியில், நேற்று காலை போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அங்கு, அண்ணா சாலை, பார்டர் தோட்டத்தைச் சேர்ந்த, மணிகண்டன், 24, அவரது சகோதரர் பாஸ்கரன், 22, ஆகியோர் கஞ்சா விற்றது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து, 3.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.




சிறுவன் உட்பட மூவருக்கு வெட்டு



செங்குன்றம்: செங்குன்றம், கோமதி அம்மன் நகர், பிரதான சாலையைச் சேர்ந்தவர் ராஜு, 40. இவரது மனைவி சித்ரா, 29; மகன் மோனிஷ், 10. இவர்கள், அதே பகுதியில், மூர்த்தி என்பவரது வீட்டில், வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். இவர்களுடன், சித்ராவின் சகோதரர் கார்த்திக், 26, என்பவரும் தங்கி உள்ளார்.இவர்களது வீட்டுக்கு மேல் தளத்தில் உள்ள வீட்டில், கணவரை பிரிந்த, தஞ்சாவூரைச் சேர்ந்த பவித்ரா, 30 என்பவர் குடியிருந்து வந்தார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வினோத், 24 என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, மூர்த்தியிடம், சித்ரா தெரிவித்துள்ளார்.வீட்டை காலி செய்யுமாறு, மூர்த்தி கூறியதால், பவித்ரா சொந்த ஊருக்கு சென்றார். ஆத்திரமடைந்த வினோத், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில், நண்பருடன் சென்று, சித்ரா, மோனிஷ் மற்றும் கார்த்திக்கை அரிவாளால் வெட்டினார். மூவரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். செங்குன்றம் போலீசார், வினோத் மற்றும் அவரது நண்பரை தேடி வருகின்றனர்.



ஆட்டோ ஓட்டுனர்கள் மோதல்




சென்ட்ரல்: புளியந்தோப்பைச் சேர்ந்தவர் ராஜா, 39. இவரும், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மகேந்திரன், 44, என்பவரும் ஆட்டோ ஓட்டுனர்கள். இருவரும், சென்னையில், எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் ரயில் நிலையம் முன், வாடகை ஆட்டோ ஓட்டி வருகின்றனர். நேற்று காலை, இவர்களுக்கிடையே, பயணியரை ஏற்றுவதில் தகராறு ஏற்பட்டது. அப்போது நடந்த மோதலில், இருவருக்கும் காயம் ஏற்பட்டது. பெரியமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.



மூவரிடம் விசாரணை



ஐ.சி.எப்: ஐ.சி.எப்., காவல் எல்லைக்கு உட்பட்ட, நியூ ஆவடி சாலை, அம்பேத்கர் நகரில் ஆரோக்கிய மேரி தேவாலயம் உள்ளது. சில வாரங்களுக்கு முன், தேவாலயத்தின் உண்டியலை உடைத்த மர்ம நபர்கள், பணத்தை திருடிச் சென்றனர். ஐ.சி.எப்., போலீசார் விசாரித்து, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சரவணன் 19, செல்வம் 25, ஆறுமுகம் 25, ஆகிய மூவரை பிடித்து விசாரிக்கின்றனர்.



பழைய இரும்பு கடை சூறை



பம்மல்: பல்லாவரம், யாஷின்கான் தெருவைச் சேர்ந்தவர் காஜா மொய்தீன், 30; பம்மலை அடுத்த கவுல்பஜாரில், பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். 7ம் தேதி, இவரது கடைக்கு, கத்தி, இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த, எட்டு பேர், காஜாமொய்தீனை கேட்டு, ஊழியர்களை தாக்கி உள்ளனர். பின், கடையை சூறையாடினர். சங்கர் நகர் போலீசார் விசாரித்து, பழந்தண்டலத்தைச் சேர்ந்த செந்தமிழ்செல்வன், 24, அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்த வினோத்குமார், 25, ஆகிய இருவரை, நேற்று கைது செய்தனர்; மற்றவர்களை தேடி வருகின்றனர்.



மணிப்பூர் வாலிபர் மீது தாக்கு




ஆதம்பாக்கம்: மணிப்பூரைச் சேர்ந்தவர் யாஷினா கெய்சிங், 20; ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகரில் தங்கி, சலுான் கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம், இவரது தோழியை, அதே பகுதியைச் சேர்ந்த மூவர் கிண்டல் செய்துள்ளனர். இவர்களை, யாஷினா கெய்சிங் தட்டிக் கேட்டுள்ளார். மூவரும் சேர்ந்து, இவரை தாக்கி உள்ளனர். ஆதம்பாக்கம் போலீசார் விசாரித்து, அதே பகுதியைச் சேர்ந்த விஜய், 23, மணிமாறன், 21, சதீஷ்குமார், 28, ஆகியோரை நேற்று கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.



கஞ்சா வியாபாரி சிக்கினார்




ஆதம்பாக்கம்: ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகரில், நேற்று முன்தினம் இரவு, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும் படி சுற்றிய, அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசன், 30, என்பவரை பிடித்து விசாரித்தனர். இவர், கஞ்சா விற்று வந்தது தெரிய வந்தது. அவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X