| வெடிகுண்டு வழக்கில் மேலும் ஒருவர் சரண் Dinamalar
வெடிகுண்டு வழக்கில் மேலும் ஒருவர் சரண்
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 அக்
2019
05:15

பிராட்வே:சிந்தாதிரிப்பேட்டையில், வெடிகுண்டு வீசிய வழக்கில், மேலும் ஒருவர் கோர்ட்டில் சரணடைந்தார்.



ராயப்பேட்டை, பார்டர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மலர்க் கொடி, 51; எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர். இவரது மகன் அழகுராஜா, 31. கடந்த, 10ம் தேதி, புதிய தலைமைச் செயலகம் அருகே, பிளாக்கர்ஸ் சாலையில் இவர்கள் ஆதரவாளர்களுடன் வந்தபோது, அழகு ராஜா, மலர்க் கொடியை, ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில், இருவரும் காயமடைந்தனர். இதை எதிர்பாராத அழகுராஜா கும்பல், ஆட்டோவில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை, எதிர் தரப்பினர் மீது வீசியது.சிந்தாதிரிப்பேட்டை போலீசார், அழகுராஜா, மலர்க் கொடி, மணிகண்டன், விஜயகுமார் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.




வழக்கில், அழகுராஜாவின் கூட்டாளியான, பல்லாவரத்தைச் சேர்ந்த கவுதம், 35, தலைமறை வாக இருந்தார். அவரை, தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.அவர், ஜார்ஜ் டவுன் நீதிமன்றத் தில், சரணடைந்தார். அரிவாளால் தாக்குதல் நடத்திய கும்பலையும், போலீசார் தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X