| அகற்றப்படாத கட்டட கழிவு மாணவர்களுக்கு ஆபத்து அபாயம் Dinamalar
அகற்றப்படாத கட்டட கழிவு மாணவர்களுக்கு ஆபத்து அபாயம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 அக்
2019
05:54

சிறுமாத்துார்:சிறுமாத்துார் அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் இடிக்கப்பட்டு, ஆறு மாதங்களாக அகற்றப்படாத கட்டட சுவரால், மாணவர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.



குன்றத்துார் ஒன்றியம், சாலமங்கலம் ஊராட்சி, சிறுமாத்துார் கிராமத்தில், அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு, 50 மாணவர்கள் பயில்கின்றனர்.இந்த பள்ளி வளாகத்தில் இருந்த பழமையான கட்டடம், ஆறு மாதங்களுக்கு முன் இடிக்கப்பட்டது. தற்போது வரை, அந்த கட்டட கழிவுகள் அகற்றப்படாமல், இடிபாடு கம்பிகள் நீட்டியபடி உள்ளன.




அப்பகுதியில் விளையாடும் மாணவர்கள், கம்பிகள் மீது தவறி விழுந்தால், விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது.மேலும், இடிபாடுகளில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் தஞ்சமடைவதால், மாணவர்கள் பீதி அடைகின்றனர்.எனவே, கட்டட இடிபாடுகளை அகற்ற வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X