செய்தி சில வரிகளில்...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

16 அக்
2019
06:07
பதிவு செய்த நாள்
அக் 16,2019 05:56

ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்



ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் பஸ் நிலையம், காந்தி சாலை பகுதிகளில் நடைபாதையை ஆக்கிரமித்து, காய்கறி, பழக்கடைகளை, பலர் நடத்தி வந்தனர். இதனால், ஸ்ரீபெரும்புதுாரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். இந் நிலையில், ஸ்ரீபெரும்புதுார் போலீசார், சாலையை ஆக்கிரமித்து வைத்திருந்த, 50க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகளை, நேற்று முன்தினம் அகற்றினர்.




மாணவர்கள் உறுதிமொழி




மதுராந்தகம்: உலக கை கழுவும் தினம், அக்., 15ம் நாளான நேற்று முன்தினம், மதுராந்தகம் ஒன்றியம், கருங்குழி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அனுசரிக்கப்பட்டது. மாணவர்களுக்கு, சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் தலைமையில், தலைமை ஆசிரியர் மற்றும் 'ஹேண்ட் இன் ஹேண்ட்' தனியார் நிர்வாகிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.கிருமிகளால் நோய் பரவாமல் தடுக்க, கைகளை தண்ணீரால் மட்டுமின்றி, சோப்பு போட்டு கழுவுதல் அவசியம் குறித்து, மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.



கிராம சபையில் பெண்கள் மனு



வில்லிவலம்: வாலாஜாபாத் அடுத்த, வில்லிவலம் ஊராட்சியில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம், கிராம சேவை மைய கட்டடம் அருகே, நேற்று முன்தினம் நடந்தது.தற்காலிக ஊராட்சி தலைவர் வீராசாமி தலைமை வகித்தார். வட்டார சமூக தணிக்கை அலுவலர் ஏகாம்பரம் பங்கேற்று, வரவு - செலவு கணக்கு வாசித்தார்.கூட்டத்தில், 100 நாள் வேலையை, 150 நாளாக உயர்த்தி தர வேண்டும். 18 நாள் ஊதியம், தனி நபருக்கு வழங்க வேண்டும் என, கிராம மக்கள் மனு அளித்தனர்.



லட்ச தீப பெருவிழா



உத்திரமேரூர்: உத்திரமேரூரில் உள்ள பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், லட்சதீப விழாவையொட்டி, காலையில், பவித்ர சமர்ப்பன பூர்ணாஹூதி தரிசனம், கலசாபிஷேகம் நடந்தது.நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, மூலவர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, லட்சதீப விழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் தீபமேற்றி வழிபட்டனர்.



வேடலில் பனை விதை நடவு


காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தைச் சேர்ந்த, 'மகிழம் குழுமம்' என்ற, சுற்றுச்சூழல் மீது ஆர்வம் மிக்க தன்னார்வ அமைப்பினர், பசுமை கூடாரம், பசுமை காஞ்சி லயன்ஸ் கிளப் ஆப் காஞ்சிபுரம் அசோக் நகர் ஆகிய அமைப்பினருடன் இணைந்து, காஞ்சிபுரம் வேடல் கிராம ஏரிக்கரையில், 3,000 பனை விதைகளை நடவு செய்தனர்.இந்த அமைப்பினர், ஏற்கனவே கடந்த மாதம், 22ம் தேதி, வேடல் ஏரிக்கரையில், 2,000 பனை விதைகளை நடவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



கோவில் நிலம் ஏலம் தள்ளிவைப்பு



திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த காயாரில், திருப்போரூர் கந்தசுவாமி கோவில் கட்டுப் பாட்டில் காயார் ஆடேஸ்வரர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில் ஆகியவை உள்ளன. இக்கோவில்களின் விவசாய நிலங்களுக்கான ஏலம், காயார் கோவில் வளாகத்தில், நேற்று முன்தினம் மாலை, 3:00 மணிக்கு, செங்கல்பட்டு சரக ஆய்வாளர், கந்தசுவாமி கோவில் மேலாளர் முன்னிலையில் நடக்க இருந்தது.கந்தசுவாமி கோவில் செயல் அலுவலர் சக்திவேல், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வரவில்லை. இதையடுத்து, நேற்றய தினம் நடக்க இருந்த ஏலம், மறுதேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.


இலவச ஆடு வழங்க ஒப்புதல்

வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், 82 கிராமங்களில், ஆடு வழங்குவதற்கான சிறப்பு கிராம சபை கூட்டம், நேற்று நடந்தது.சில தினங்களுக்கு முன், ஆடு பெறும் பயனாளிகளை தேர்வு செய்யும் பணியை, அந்தந்த கால்நடை மருத்துவர்கள் செய்து வந்தனர்.இதன் இறுதி பட்டியலை, கிராச சபையில், பொதுமக்களின் ஒப்புதலுக்கு முன் வைத்தனர். ஆடு பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை மற்றும் விபரங்களை, கால்நடைத் துறையினர் தெரிவிக்கவில்லை.


ஆசிரியர்களுக்கு கற்றல் பயிற்சி


காஞ்சிபுரம்: அரசு இடைநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஒருங்கிணைந்த புதுமை கற்றல் பயிற்சி, காஞ்சிபுரத்தில் நடந்தது.காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி., பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த பயிற்சிக்கு, ஒன்று முதல், 8ம் வகுப்பு வரை சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.பயிற்சியின், 2வது நாளான நேற்று, காஞ்சி புரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த பல ஆசிரியர்கள் பங்கேற்றனர்.இவர்களுக்கு, புதிய கற்றல் முறை குறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தினர் பயிற்சி அளித்தனர்.



செவிலியர்களுக்கு சிறப்பு பயிற்சி


முத்தியால்பேட்டை: குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து, கிராமப்புற சுகாதார செவிலியர்களுக்கு, விழிப்புணர்வு முகாம் நடந்தது.காஞ்சிபுரம் அடுத்த, முத்தியால்பேட்டை ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் நடந்த பயிற்சிக்கு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மதியழகன் தலைமை வகித்தார்.தத்தெடுக்கும் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்தும், குழந்தைகளின் பாதுகாப்பு சட்டம் குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வாலாஜாபாத் வட்டார துணை சுகாதார நிலைய செவிலியர்கள் பலர் பங்கேற்றனர்.


உலக கிராம பெண்கள் தின விழா


செங்கல்பட்டு: உலக கிராம பெண்கள் தினமான நேற்று, தமிழக பெண்கள் இயக்கம் சார்பில், செங்கல்பட்டு அடுத்த, பழவேலியில், ஆலோசனை கூட்டம் நடந்தது.செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டாக்டர்கள் சண்முகம், வெங்கடேஸ்வரி, வனத்துறை அலுவலர் கேசவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், கிராம பொது நிலங்களை, உள்ளூர் தலித், பழங்குடி பெண்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி பேசப்பட்டது.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X