போலீஸ் டைரி: காஞ்சிபுரம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2019
06:06

பேனர் கடையில் சிறுவர்கள் திருட்டு



உத்திரமேரூர்: உத்திரமேரூர் பஜார் வீதியில், விளம்பர பேனர் கடை வைத்திருப்பவர் முகமது ஆசிக், 50.இவரது கடைக்கு, 14ம் தேதி வந்த இரு சிறுவர்கள், பணியாளர்களை திசை திருப்ப தண்ணீர் கேட்டுள்ளனர். பின், கல்லா பெட்டியில் இருந்த, 48 ஆயிரம் ரூபாயை, சிறுவர்கள் எடுத்து சென்றுள்ளனர்.வெளியே சென்று விட்டு, கடைக்கு வந்த முகமது ஆசிக், பணம் இல்லாததை பார்த்து, கடையின், 'சிசிடிவி' கேமரா பதிவுகளை பார்த்தபோது, சிறுவர்கள் பணம் எடுத்தது தெரிந்தது. அவரது புகாரையடுத்து, உத்திரமேரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.



4 பேருக்கு, 'குண்டாஸ்'



காஞ்சிபுரம்: விஷ்ணு காஞ்சி காவல் எல்லைக்குட்பட்ட ரவுடி டிராவிட், 24. இவர் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்குகள் உள்ளன. இவரை, போலீசார் நேற்று, குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.இதே போல், கஞ்சா விற்பனை செய்த ராம்குமார், 23, விக்கி, 21 மற்றும் தாயார்குளம் பகுதியைச் சேர்ந்த ரவுடி தியாகு, 30, ஆகியோரையும், குண்டர் சட்டத்தில், போலீசார் நேற்று கைது செய்தனர். அதற்கான நகலை, சிறையில் உள்ள குற்றவாளிகளிடம், போலீசார் வழங்கினர்.




விபத்தில் மீனவர் பலி



மாமல்லபுரம்: கூவத்துார் அடுத்த, அங்காளம்மன்குப்பத்தைச் சேர்ந்த, நாகூரான் மகன் சுதாகர், 37; மீனவர். நேற்று முன்தினம் இரவு, இருசக்கர வாகனத்தில், புதுப்பட்டினம் சென்று, அவரது பகுதிக்கு, திரும்பி கொண்டிருந்தார்.அடையாளச்சேரி பகுதியில், 8:45 மணிக்கு கடந்தபோது, சாலையோரம் நின்ற சரக்கு லாரியில் மோதி, அதே இடத்தில் இறந்தார். கூவத்துார் போலீசார், விசாரிக்கின்றனர்.




லாரி கவிழ்ந்து கோழிகள் இறப்பு



சுங்குவார்சத்திரம்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து, 'பாய்லர்' கோழிகளை ஏற்றிய மினி லாரி, சென்னைக்கு சென்றது.சென்னை- - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, சுங்குவார்சத்திரம் அருகே, நேற்று அதிகாலை, ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம், மினி லாரி கவிழ்ந்தது.இதில், லாரியில் இருந்த, 300க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்தன. ஓட்டுனர் யாசின், 42, லேசான காயங்களுடன் தப்பினார்.



மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு



காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த, களியனுார் இருளர் காலனியை சேர்ந்தவர் கோபி, 45. நேற்று மதியம், கன்னிகாபுரம் பகுதியில், மரம் வெட்டும் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, இடியுடன் கூடிய மழை பெய்தது. அதை பொருட்படுத்தாமல் பணியில் ஈடுபட்ட கோபி மீது, மின்னல் தாக்கியது.மரத்தில் இருந்து விழுந்த கோபி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.



சேலையில் தீப்பற்றி மூதாட்டி மரணம்



காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த மேல்பேரமநல்லுாரைச் சேர்ந்தவர் சுப்புராயலு மனைவி மோகனா, 65.நேற்று முன்தினம், வீட்டில், மண்ணெண்ணெய் அடுப்பில் சமையல் செய்யும் போது, மோகனாவின் சேலையில் தீப்பற்றி எரிந்தது.இவரது அலறலை கேட்டு, அக்கம் பக்கத்தினர் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின், சென்னையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை, அவர் இறந்தார்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X