காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கல்வி மாவட்டம் சார்பில், ஜவஹர்லால் நேரு அறிவியல் மற்றும் கணித கண்காட்சி, நேற்று நடந்தது.
காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிக்கல்வித் துறை சார்பில், காஞ்சிபுரம் அந்திரசன் மேல்நிலைப் பள்ளியில், ஜவஹர்லால் நேரு அறிவியல், கணிதம் மற்றும் சுற்றுச்சூழல் கண்காட்சி, நேற்று நடத்தப்பட்டது.இதில், அரசு சார்பில், 52 பள்ளிகளும், 15 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 95 ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகளும், 15 மெட்ரிக் பள்ளிகளும் பங்கேற்றன.கணிதம், எதிர்கால அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு, அவற்றை பாதுகாப்பது குறித்து, பல்வேறு செயல்முறை விளக்கங்களை, மாணவ - மாணவியர் காட்சிபடுத்தியிருந்தனர்.
இக்கண்காட்சியை, காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலர் மகேஸ்வரி துவக்கி வைத்தார்.நேற்று மாலை, கண்காட்சி முடிவில், சிறந்த படைப்புகள் செய்த மாணவ - மாணவியருக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, பரிசுகளை வழங்கி பாராட்டினார்.