உத்திரமேரூர்:அருங்குன்றத்தில், 'டெங்கு'வால் சிறுமி பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அப்பகுதியில், காய்ச்சல் தடுப்பு முகாம் நடந்தது.
சாலவாக்கம் அடுத்த அருங்குன்றம் கிராமத்தில், புவனேஸ்வரி என்ற, 11 வயது சிறுமி, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.இந்நிலையில், உத்திரமேரூர் வட்டார சுகாதார நிலையம் சார்பில், அருங்குன்றத்தில், நேற்று முன்தினம், காய்ச்சல் தடுப்பு முகாம் நடந்தது.
காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களை கண்டறிந்து, ரத்த பரிசோதனை பார்க்கப்பட்டது; மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.குழந்தைகள் முதல் முதியவர் வரை, அனைவருக்கும், நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.மேலும், சாலவாக்கம், படூர் ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள், வீடு, வீடாக சென்று, சுகாதாரம் குறித்து ஆய்வு செய்தனர்.