செங்கல்பட்டு:செங்கல்பட்டு வித்யாசாகர் குளோபல் பள்ளியில், உலக மாணவர்கள் தின விழா, பள்ளியின் தாளாளர் விகாஸ் சுரானா தலைமையில், நேற்று நடந்தது.
விழாவில், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்ற துணைத் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்று, மாணவர்கள் உருவாக்கிய, மாதிரி செயற்கைக்கோள்களை பார்வையிட்டு, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.முதல்வர் கோவிந்தசாமி வரவேற்றார். கல்வி குழுமத்தின் இயக்குனர் ஆச்சார்யா முன்னிலை வகித்தார். பின், மாணவ - மாணவியரின் கலை நிகழ்ச்சி, பேச்சு போட்டிகள் நடந்தன. இதில், வெற்றி வெற்ற மாணவர்களுக்கு, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.