சினிமா பார்ப்பது பாவம்: நடிகர் சிவகுமார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2019
06:22

''நான் பிறந்த காலத்தில், சினிமா பார்ப்பது, மது குடிப்பது, புகை பிடிப்பது போன்றவை பாவச்செயல்,'' என, நடிகர் சிவகுமார் பேசினார்.



சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி, இன்பா என்பவர், 'சிவாஜி ஆளுமை பாகம் - நான்கு' என்ற நுாலை எழுதியுள்ளார். சென்னை, எழும்பூரில் உள்ள, எத்திராஜ் மகளிர் கல்லுாரியில் நடந்த விழாவில், நுாலை வெளியிட்டு, நடிகர் சிவகுமார் பேசியதாவது:நான் பிறந்த காலக்கட்டத்தில், சினிமா பார்ப்பது, பீடி, சிகரெட் புகைப்பது, மது குடிப்பது பாவச்செயலாக பார்க்கப்பட்டது.



தீபாவளி, பொங்கல் பண்டிகைகளில், பகல் காட்சி மட்டும் பார்த்துவிட்டு வந்துவிட வேண்டும். அப்படி ஒரு பண்டிகை நாளில், 1956ல், 'வணங்காமுடி' படம் பார்த்தேன்.படத்தில், சிவாஜி வசனம் பேசும்போது, அரங்கமே அதிரும். அப்போதே, நான் இறப்பதற்குள் சிவாஜியை பார்த்துவிட்டுத்தான் சாக வேண்டும் என, நினைத்தேன்.சினிமாவுக்கு, 1965ல் வந்தேன். 'மோட்டார் சுந்தரம் பிள்ளை' படத்தில், சிவாஜியின் மூத்த மருமகனாக நடித்தேன்.



அதே நேரத்தில், 'கந்தன் கருணை' படத்தில், முருகன் பாத்திரத்தில் நடிக்க, நான் தேர்வானேன். அதே படத்தில், வீரபாகுவாக சிவாஜி நடித்தார்.சினிமாவில், எதுவும் தெரியாமல் காலம் கடத்த முடியாது என, முடிவு செய்து, சொந்தமாக நாடக கம்பெனி ஆரம்பித்தேன்; ஆனால் நடத்த முடியவில்லை. அதன்பின், மேஜர் சுந்தர்ராஜன் நாடக குழுவில் சேர்ந்து, இந்தியா முழுக்க, 1,000 நாடகங்களில் நடித்தேன்.



அப்போது தான், மனப்பாடம் செய்யும் கலையை கற்றேன். என், 67 வயதில், கம்பராமயணம், 15 ஆயிரம் பாடல்கள் கற்று, அவற்றை சுருக்கி உரை நிகழ்த்தினேன். மகாபாரதத்தை நான்கு ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து கற்றதை, 6,500 மாணவர்கள் முன்னிலையில் உரை நிகழ்த்தினேன். இதற்கெல்லாம் ஆசானாக இருந்தவர் சிவாஜி. இவ்வாறு அவர் பேசினார். விழாவில், தமிழக அரசின் முன்னாள் செயலர் ராஜேந்திரன், முனைவர் ராஜாராம், நடிகர் சித்ரா லட்சுமணன், எத்திராஜ் கல்லுாரி முதல்வர் கோதை, வரலாற்று துறை தலைவர் கவுசல்யா குமாரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


- நமது நிருபர் -

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X