கெடு! தொழில் உரிமம் பெறாத வர்த்தக நிறுவனங்களுக்கு : இம் மாதம் 31 ம் தேதிக்குள் பெற கால அவகாசம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2019
06:33

திருத்தணி:திருத்தணி நகராட்சியில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க், உணவு விடுதிகள் உட்பட, அனைத்து வர்த்தக நிறுவனங்களும் தொழில் உரிமத்தை, வரும், 31ம் தேதிக்குள் நகராட்சியில் பெற்றுக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட வர்த்தக நிறுவனங்கள் மீது, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என, நகராட்சி நிர்வாகம் எச்சரித்து உள்ளது.



திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளில், மொத்தம், 14 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும், ஆறு பெட்ரோல் பங்க், 33 திருமண மண்டபங்கள், 25 ஓட்டல்கள், 23 பேக்கரி மற்றும் இனிப்பு கடைகள் என, மொத்தம், 813 வர்த்தக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.



சான்று





இதில், பெட்ரோல் பங்க், ஓட்டல், பல சரக்கு கடை, விடுதிகள், உணவு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம், சர்வீஸ் ஸ்டேஷன், திருமண மண்டபங்கள் மற்றும் தேநீர் கடைகள் ஆகியவை, நகராட்சி நிர்வாகம் மூலம் வழங்கப்படும் தொழில் உரிமம் சான்று பெற்று தான் இயங்க வேண்டும்.ஆனால், பெரும்பாலான கடை உரிமையாளர்கள், தொழில் உரிமம் சான்று பெறாமல் வியாபாரம் செய்து வருகின்றனர்.இதனால், நகராட்சி நிர்வாகத்திற்கு நிதி இழப்பீடும், ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் மற்றும் சான்றுகள் பெறாத பட்சத்தில், நகராட்சி அதிகாரிகள் தண்டனைக்கு உள்ளாவர்.



இது தவிர, 813 வர்த்தக நிறுவனங்களும் தொழில் வரி செலுத்த வேண்டும். இதன் மூலம் ஆண்டுக்கு, 5.71 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும்.பெரும்பாலானோர் தொழில் வரி செலுத்தாமல், காலதாமதம் செய்வதால், நகராட்சியில் கடும் நிதி பற்றாக்குறை ஏற்பட்டு, வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுகின்றன.



அறிவுறுத்தல்






நகராட்சி வருவாய் பிரிவில் பணிபுரியும் ஆய்வாளர், ஊழியர்கள், சம்பந்தப்பட்ட வர்த்தக உரிமையாளர்களிடம் பல முறை நேரில் சந்தித்து, தொழில் வரி செலுத்த வேண்டும்; தொழில் உரிமம் சான்று பெற வேண்டும் என, அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், பெரும்பாலான உரிமையாளர்கள் தொழில் வரி கட்டாமல் காலதாமதம் செய்து வருகின்றனர்.வழக்கு தொடரப்படும்




இது குறித்து, நகராட்சி ஆணையர் கா.ராஜலட்சுமி கூறியதாவது:நகராட்சியில் தொழில் உரிமம் சான்று, மொத்தம், 350 பேர் பெற வேண்டும். ஆனால், இதுவரை, 130 பேர் மட்டுமே அதற்கான கட்டணம் நகராட்சியில் செலுத்தி, சான்று பெற்று தொழில் செய்கின்றனர்.மீதமுள்ளவர்கள் பல ஆண்டுகளாக சான்று வாங்காமல், காலம் தாழ்த்தி வருகின்றனர். பல முறை எச்சரித்தும் கடை, வர்த்தக உரிமையாளர்கள் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.




இம்மாதம், 31ம் தேதிக்குள் சான்று பெறாமல் செயல்படும் கடைகள், வர்த்தக நிறுவனங்களுக்கு இறுதி கட்ட, 'நோட்டீஸ்' வழங்கி, அவற்றின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.எனவே, வர்த்தக உரிமையாளர்கள் நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.ரூ.4.50 கோடி வரி தொகை நிலுவைநகராட்சிக்கு ஓராண்டுக்கு, சொத்து வரி, வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் குத்தகை இனம் என, மொத்தம், 2.58 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.




ஆனால், பெரும்பாலான வீடு மற்றும் கடை உரிமையாளர்கள், பல ஆண்டுகளாக சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தாமல் உள்ளனர். தற்போது, 4.50 கோடி ரூபாய் வரி தொகையை, நகராட்சிக்கு மக்கள் செலுத்த வேண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X