காய்ச்சல் வந்தால் அரசு மருத்துவமனை செல்லுங்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2019
06:38

ஊத்துக்கோட்டை:'காய்ச்சல் வந்தால், அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டது.ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், 'டெங்கு' காய்ச்சல் தடுப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம், செயல் அலுவலர் ரவிச்சந்திரபாபு தலைமையில் நடந்தது.



இளநிலை உதவியாளர் பங்கஜம் வரவேற்றார். அரசு மருத்துவர் தீபா, பொது சுகாதாரம், வருவாய், பள்ளிக்கல்வி, மகளிர் சுயஉதவி குழுவினர், அங்கன்வாடி மைய ஊழியர்கள், பேரூராட்சி ஊழியர்கள் பங்கேற்றனர்.செயல் அலுவலர் ரவிச்சந்திரபாபு பேசியதாவது:'டெங்கு' காய்ச்சல் வருவதை தடுக்க, அனைத்து துறை அதிகாரிகளை கொண்ட குழு உருவாக்கப்பட உள்ளது.



இதில் உள்ள அனைவரும், பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் உள்ள வீடுகளை ஆய்வு செய்ய வேண்டும். ஆங்காங்கே நல்ல தண்ணீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும் என, பொதுமக்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.ஒவ்வொரு நாளும், எந்த பகுதிக்கு ஆய்வு செல்ல வேண்டும் என்பது குறித்து, 'வாட்ஸ் அப்' குழு உருவாக்கி, அதில், தகவல் தெரிவிக்கப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.




அரசு மருத்துவர் தீபா பேசியதாவது:'டெங்கு' கொசு, நல்ல தண்ணீரில் உருவாகிறது.இதனால் வீடுகளில், தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், அம்மிக்கல், தேங்காய் சிரட்டை, பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றுதல் வேண்டும்.காய்ச்சல் ஏற்பட்டால், மருந்து கடைகளில், மாத்திரை வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மருத்துவம் பார்க்க வேண்டும்.'டெங்கு' காய்ச்சலை தடுக்க, ஒவ்வொருவரும் தங்களது வீடுகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X