| இளைஞர் எழுச்சி நாள் Dinamalar
இளைஞர் எழுச்சி நாள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 அக்
2019
06:48

திருவள்ளூர்:முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த நாள் மற்றும் இளைஞர் எழுச்சி நாளை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.



முன்னாள் ஜனாதிபதி, ஏ.பி.ஜே.அப்துல் கலாம், 88-வது பிறந்த நாளை முன்னிட்டு, இளைஞர் எழுச்சி நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி, திருவள்ளூரில் நேற்று நடந்தது.கலெக்டர் மகேஸ்வரி, பேரணியை துவக்கி வைத்து பேசியதாவது:




இந்தியா, அறிவியல் மற்றும் வல்லரசு நாடாக திகழ வேண்டும் என, கனவு கண்டவர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். அவரது நினைவாக, மாவட்டம் முழுவதும், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்.டி.ஆர்.பி.சி.சி.சி. இந்து மேல்நிலை பள்ளியில், பள்ளி- கல்வித் துறை சார்பாக, மாவட்ட அளவில் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.



நிகழ்ச்சியில், முதன்மை கல்வி பொறுப்பு அலுவலர் குணசேகரன், தாசில்தார் பாண்டியராஜன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திருவரசு உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X