* போலீஸ் டைரி: திருவள்ளூர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2019
06:49

நகை, பணம் திருடிய மர்ம நபர்கள்


கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே, பெத்திக்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் பிரபு, 32. டெய்லர். நேற்று முன்தினம் இரவு, அவரது வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், உள்ளே சென்றனர்.பீரோவை உடைத்து, 5 சவரன் நகை, 15 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றனர். வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.



நகை திருடிய மருமகன் கைது


திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம், அரிச்சந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால் மனைவி சரோஜா,58. இவரது மருமகன் பாண்டியன்,42.கடந்த மாதம், 16ம் தேதி, சரோஜா வீட்டில் இல்லாத போது, பாண்டியன் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் வைத்திருந்த, 1 சவரன் தங்கச்செயினை திருடி, சின்னம்மாபேட்டையில் உள்ள ஒரு அடகு கடையில், 18 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்தார்.அந்த பணத்தை, பாண்டியன், மது குடித்து பணத்தை காலி செய்தார்.இது குறித்து, தகவல் அறிந்ததும், சரோஜா கொடுத்த புகாரின்படி, திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிந்து, பாண்டியனை கைது செய்து விசாரிக்கின்றனர்.


20 சவரன் நகைகள், 'அபேஸ்'


மீஞ்சூர்: மீஞ்சூர் அடுத்த, அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முரளி. இவர். நேற்று முன்தினம். குடும்பத்தினருடன் திருப்பதி கோவிலுக்கு சென்றிருந்தார்.நேற்று காலை, வீடு திரும்பிய முரளி, பீரோ உடைக்கப்பட்டு, 20 சவரன் நகைகள், 1.5 கிலோ வெள்ளி பொருட்கள், 40 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரிந்து, மீஞ்சூர் போலீசில் புகார் அளித்தார்.


தீக்குளித்த கொத்தனார் பலி


செவ்வாப்பேட்டை: திருவள்ளூர் அடுத்த, செவ்வாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் மகன் மூர்த்தி, 48. கொத்தனார் பணி செய்து வந்த இவருக்கு, சுமதி, 40, என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர், 9ம் தேதி தீக்குளித்தார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட மூர்த்தி, நேற்று முன்தினம் இறந்தார்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X