80 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் ஓசூரில் அதிகாரிகள் பறிமுதல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2019
10:28

ஓசூர்: ஓசூரில், பிளாஸ்டிக் ஆய்வு செய்த அதிகாரிகள், 80 கிலோ கவர்களை பறிமுதல் செய்ததுடன், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமற்ற நிலையில் இருந்த ஓட்டலுக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு, தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஓசூர் மாநகராட்சி பகுதியில் தடையை மீறி, ஓட்டல்கள், கடைகள் மற்றும் பூ மார்க்கெட் பகுதிகளில், பிளாஸ்டிக் கவர்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வந்தன. இதையடுத்து, மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் சுந்தரமூர்த்தி, ரமேஷ், மணி, அன்பழகன் ஆகியோர் தலைமையில் சோதனை நடந்தது. துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் அடங்கிய குழுவினர், ஓசூர் நகர் பகுதியில் உள்ள ஓட்டல்கள், பஸ் ஸ்டாண்ட் பகுதிகள், பூ மார்க்கெட் என மொத்தம், 450 கடைகளில் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது, ஒருமுறை பயன்படுத்தும், 80 கிலோ பாலித்தீன் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் கவர்களை பயன்படுத்தி வந்த கடைகள் மற்றும் ஓட்டல்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமற்ற நிலையில் இருந்த ஓட்டலுக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X