| மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி Dinamalar
மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 அக்
2019
10:28

கிருஷ்ணகிரி: மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில், 1,064 மாணவ, மாணவியர் பங்கேற்று தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தினர். கிருஷ்ணகிரி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி, அறிவியல் பெருவிழா மற்றும் கணித கருத்தரங்கு நடந்தது. கலெக்டர் பிரபாகர் துவக்கி வைத்தார். சி.இ.ஓ., மகேஸ்வரி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் மகேந்திரன் வரவேற்றார். கண்காட்சியை கலெக்டர் பார்வையிட்டு, மாணவர்களின் படைப்புகளை கேட்டறிந்தார்.


இது குறித்து, சி.இ.ஓ., கூறியதாவது: ஆராய்ச்சி மனப்பான்மையை ஊக்குவிக்கும் வகையில், மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்க வைப்பதுடன், பாட இணைச்செயல்பாடுகளிலும் ஈடுபட வைப்பது அவசியமாகிறது. அப்போது தான், கற்றல் மற்றும் மாணவர்களின் ஆளுமை வளர்ச்சி முழுமையாகும். ஒவ்வொரு பள்ளியிலிருந்தும், ஆறு முதல் எட்டாம் வகுப்புகள் வரை, ஒரு கண்காட்சி பொருளும், ஒன்பது முதல் பிளஸ் 2 வரை, ஒரு கண்காட்சி பொருளும், காட்சி படுத்தப்பட்டன. மாவட்டம் முழுவதும், 270 அரசு பள்ளிகளில் இருந்து, 1,064 மாணவர்களும், 80 வழிகாட்டி ஆசிரியர்களும், 20 ஆசிரியர்களும் அறிவியல் கண்காட்சியில் பங்கு பெற்றனர். இதில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த, 12 பேராசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டு முதல் மூன்று பரிசுக்குரியவர்களை தேர்ந்தெடுத்து, பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.


 

Advertisement
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X