போச்சம்பள்ளி: பர்கூர் ஒன்றியம், ஆலரஹள்ளி கிராமத்தில், அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், 80க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளி முன், குள்ளம்பட்டி, சந்தூர், கே.புதூர் உட்பட பல்வேறு கிராமங்களை இணைக்கும் தார்ச்சாலை செல்கிறது. மாணவ, மாணவியர் நலன் கருதி, பள்ளி முன், வேகத்தடை அமைக்க வேண்டும் என, பல்வேறு துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனு கொடுத்தும், இதுவரை வேகத்தடை அமைக்கவில்லை. இதனால் மாணவ, மாணவியர் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. அதற்கு முன்பாக வேகத்தடை அமைக்க வேண்டும்.