பைக் வழிப்பறி கொள்ளையர்கள் நடமாட்டத்தால் பெண்கள் அச்சம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2019
10:30

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகரில், பைக்கில் வரும் வழிப்பறி கொள்ளையர்களின் நடமாட்டத்தால், பெண்கள் அச்சமடைந்துள்ளனர்.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அதிகாலை நேரத்தில் பைக்கில் ஹெல்மெட் அணிந்து வரும் கொள்ளையர்கள், வீட்டு வாசலில் கோலமிடும் பெண்கள், சாலையில் நடந்து செல்லும் பெண்கள் அணிந்திருக்கும் நகைகளை பறித்துக்கொண்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தன. இதையடுத்து, அதிகாலை நேரத்தில் போலீசார் நகர் முழுவதும் தீவிர ரோந்து பணி மேற்கொண்டதால், வழிப்பறி சம்பவங்கள் குறைந்தன. இந்நிலையில், கிருஷ்ணகிரி நகரில் மீண்டும் இது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. நேற்று முன்தினம் அதிகாலை, நகரின் மையப்பகுதியில் உள்ள செட்டியம் பட்டியில், நடைபயிற்சி மேற்கொண்ட பெண்ணின் கழுத்திலிருந்த ஒன்பது பவுன் செயின், சப்-ஜெயில் ரோட்டில் நடந்து வந்த ஒரு பெண்ணிடம், நான்கு பவுன் செயினை, பைக்கில் வந்த கொள்ளையர்கள் பறித்துக்கொண்டு தப்பினர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்படி, நகரில் இரவு முழுவதும் போலீசார், ரோந்து பணி மேற்கொண்டனர். இருப்பினும், தீபாவளி நெருங்கி வரும் நேரத்தில், நகரில் பைக் கொள்ளையர்கள் அட்டகாசம் மீண்டும் துவங்கி உள்ளதால், பெண்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


 

Advertisement
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X