கமுதி : கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்இன்று (அக்.17) மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்நடக்கிறது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு தலைமை வகிக்கிறார். மாற்றுத்திறனாளிகள் பங்கேற்குமாறுகமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மல்லிகா தெரிவித்தார்.
அவர்கூறியதாவது: மாற்றுத்திறனாளிகள் அரசு நலத்திட்ட உதவிகள் பெறும்வகையில், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகள் வழங்கும் சிறப்பு முகாம், கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் இன்று(அக்.,17)நடக்கிறது. இம்முகாமில் மாற்றுத்திறன் கொண்டவர்கள் கலந்து கொண்டு அடையாள அட்டை பெறலாம்.மேலும் இத்திட்டத்தில் பயன்பெற மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஒரிஜினல்களை முகாமில் கொண்டு வந்து, பயன்பெறலாம்,என்றார்.