கிடப்பில் குருசடை தீவு சுற்றுலா படகு சவாரி; ரூ.30 லட்சம் வீண்; படகுகள் சேதமடையும் அபாயம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2019
23:47

ராமேஸ்வரம் : மன்னார் வளைகுடா கடலில் உள்ள குருசடை தீவுக்கு சுற்றுலா படகு சவாரி திட்டம் கிடப்பில் போடப்பட்டதால் இதற்கென வாங்கப்பட்ட படகுகள் சேதம் அடைவதால் 30 லட்சம் ரூபாய் வீணடிக்கப்படும் அபாயம் உள்ளது.



ராமேஸ்வரம் அருகே பாம்பன் முதல் துாத்துக்குடி வரை கடலில் 560 சதுர கி.மீ., பரப்பளவில் 21 மன்னார் வளைகுடா தீவுகள் உள்ளன. இத்தீவுகளை சுற்றிலும் டால்பின், கடல் பசு, கடல் குதிரை, கடல் ஆமைகள் உள்ளிட்ட 450 வகை அரிய கடல் வாழ் உயிரினங்கள் வாழ்கிறது. மேலும் மன்னார் வளைகுடா தீவுகளை சுற்றி வளரும் பவளப்பாறைகள் கடல் அரிப்பை தடுத்து தீவுக்கு பாதுகாப்பு அரணாக உள்ளது. 1980ல் இத்தீவுகளை தேசிய கடல் பூங்காவாக மத்திய அரசு அறிவித்த பின் தீவுகளில் மீனவர்கள், வெளி நபர்கள் தங்கவோ, மீன்பிடிக்கவோ வனத்துறை தடை விதித்தது.



உயிரியியல் தீவு:


21 தீவுகளில் கடல் வாழ் உயிரினங்களின் சொர்க்க புரியாக குருசடை தீவு உள்ளதால், இத்தீவுக்குள் உயிரியியல் ஆய்வு கூடம் இருந்தது. இங்கு வனத்துறை அனுமதியுடன் உயிரியியல் ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வில் ஈடுபட்டதால், இதனை 'உயிரியியல் பூங்கா தீவு'என கடல்சார் நிபுணர்கள் தெரிவித்தனர். ஆனால் சில காரணங்களுக்காக 16 ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்கள் செல்லவும் தடை விதித்தனர்.



கிடப்பில் சுற்றுலா திட்டம்:


மன்னார் வளைகுடா தீவுகள் குறித்து கூகுள், அறிவியல் மற்றும் வனத்துறை சார்ந்த புத்தகத்தில் படித்து தெரிந்திருந்த மாணவர்கள், கடல்சார் ஆர்வலர்களுக்கு குருசடை தீவுக்கு ஜூனில் சுற்றுலா படகு சவாரி துவக்குவதற்காக 30 லட்சம் ரூபாயில் 4 கண்ணாடி இழை படகுகள் வாங்கப்பட்டன. இவற்றை நிறுத்த குந்துகால் கடற்கரையில் வனத்துறையினர் மரப்பலகையில் பாலம் அமைத்தனர். ஆனால் படகு சுற்றுலாவுக்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சுற்றுலா திட்டத்தை வனத்துறை கிடப்பில் போட்டது.



படகுகள் சேதம்:


இதனால் கடந்த 5 மாதமாக குருசடை தீவு முன்பு நிறுத்தியுள்ள 4 படகுகளும் நவ., முதல் ஜன., வரை வட கிழக்கு பருவ மழையில் சிக்கி கரையில் மூழ்கி சேதமடையும். மேலும் குந்துகால் கடற்கரையில் பயன்பாடின்றி உள்ள மரப்பாலம் ராட்சத அலையில் சிக்கி சேதமடையும் அவல நிலை உள்ளதால் வனத்துறைக்கு 30 லட்சம் ரூபாய் வீணாகும் அபாயம் உள்ளது.



மீனவ மகளிருக்கு வருவாய் கிடப் பில் கிடக்கும் குருசடை தீவுக்கு படகு சவாரியை துவக்கினால், சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதும். குந்துகால் கடலோரத்தில் கடல்சார் உணவு விடுதி அமைத்து பராமரிக்க மீனவ மகளிர் குழுவுக்கு அனுமதி வழங்கினால் அதிக வருவாய் கிடைப்பதுடன் மீனவர்களுக்கு மாற்று தொழிலுக்கு வழி வகுக்கும். எனவே தீவுகளுக்கு படகு சவாரி துவக்குவதற்கு முன் மீனவர்கள், சமூக ஆர்வலர்களுடன் திட்டத்தின் சாதக, பாதகங்கள் குறித்து மீனவர்களுக்கு விளக்க கூட்டம் நடத்த கலெக்டர் வீரராகவராவ் நடவடிக்கை எடுத்தால் குந்துகால் பகுதி சுற்றுலா, பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்து மீனவர்கள் பயனடைவார்கள்.



படகு சவாரியில் பார்க்க வேண்டிய இடங்கள்




வனத்துறை துவக்க இருந்த சுற்றுலா திட்டத்தில், 'இயற்கை நமக்கு அளித்த மன்னார் வளைகுடா தீவுகளை படகு சவாரி மூலம் கண்டு ரசிக்க ஏற்பாடு செய்திருந்தது. இத்திட்டத்தின்படி பாம்பன் குந்துகால் கடற்கரையில் (சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் பின்புறம்) இருந்து புறப்படும் வனத்துறைக்கு சொந்தமான கண்ணாடி இழை படகில் சென்று 1.5 கி.மீ.,ல் கடலுக்குள் உள்ள குருசடை தீவில் சுற்றுலா பயணிகள் இறக்கி விடப்படுவர். அங்கு தீவில் உள்ள தாவரங்கள், தீவு அருகில் கடலில் துள்ளி குதிக்கும் டால்பின் மீன்களை கண்டு ரசிக்கலாம்.



பின் அங்கிருந்து சுற்றுலா பயணிகள் படகில் புறப்பட்டு பூமரிச்சான் தீவு, புள்ளிவாசல் தீவு, சிங்கில் தீவுகளை படகில் இருந்தபடி கடலுக்குள் உள்ள பவளப் பாறைகள், கடல் வாழ் உயிரினங்களை கண்டு ரசிக்கலாம். சுமார் ஒரு மணி நேரத்தில் 4 மன்னார் தீவுகளை படகில் சென்று சுற்றுலா பயணிகள் வலம் வந்து கண்டு ரசிக்கலாம். இதற்காக நபருக்கு 200 முதல் 300 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்க வனத்துறை திட்டமிட்டு இருந்தது. இந்த மன்னார் தீவு சுற்றுலா படகு சவாரி துவங்கினால், குந்துகால் முக்கிய சுற்றுலா தலமாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-அக்-201906:42:24 IST Report Abuse
ஆப்பு எல்லாம் காசுதான். மீனவர்களுக்கு இயற்கையைக் காப்பதில் பெரிய அக்கறையெல்லாம் கிடையாது. படகுசவாரி காண்டிராக்டை எதிர்பார்க்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X