| துணை மின் நிலையத்தில் புதிய உபகரணங்கள் பொருத்தம் Dinamalar
துணை மின் நிலையத்தில் புதிய உபகரணங்கள் பொருத்தம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 அக்
2019
23:57

பாகூர்:பாகூர் துணை மின்நிலையத்தில், பழைய உபகரணங்கள் அகற்றப்பட்டு, 23 லட்சம் ரூபாய் செலவில் புதிய மின் உபகரணங்கள் பொருத்தப்பட்டன.



புதுச்சேரி - கடலுார் சாலை காட்டுக்குப்பத்தில், துணை மின் நிலையம் இயங்கி வருகிறது. இதன் மூலம், பாகூர், சேலியமேடு, காட்டுக்குப்பம், கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பம், தவளக்குப்பம், நோணாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களுக்கும், விவசாய மின் இணைப்புகளுக்கு, மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.துணை மின் நிலையத்தில், நீண்ட காலமாக முக்கிய உபகரணங்கள் மாற்றப்படாமல் இருந்தது. குறிப்பாக, மின் பயன்பாடு அளவீடு, மின்தடை ஏற்பட்டால் அது குறித்து எச்சரிக்கை விடுக்கும் 'கரண்ட் டிரான்ஸ்பார்மர்' கருவி, அதற்கான 'பேட்டரி மற்றும் சார்ஜரில்' அடிக்கடி ஏற்படும் பழுது காரணமாக மின் தடை ஏற்பட்டு வந்தது. இதனால், பொது மக்கள் மிகுந்த அவதிப்பட்டு வந்தனர்.தற்போது பழைய மின் உபகரணங்களை அகற்றி, 20 லட்சம் ரூபாய் செலவில் புதிய உபகரணங்களை பொருத்தும் பணி நேற்று மேற்கொள்ளப் பட்டது.துணை மின் நிலைய உதவிப் பொறியாளர் கண்ணன் கூறுகையில், 'துணை மின் நிலையத்தில் கரண்ட் டிரான்ஸ்பார்மர், அதற்கான பேட்டரி மற்றும் சார்ஜர் புதிதாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் தடையின்றி மின் விநியோகம் செய்திடவும், மின் தடை ஏற்பட்டால், பழுது எங்கு ஏற்பட்டுள்ளது என்பதை உடனே கண்டறிந்து சரி செய்ய முடியும் என கூறினார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X