ஊட்டி: ஊட்டி நகராட்சியில், 36 வார்டுகளில் ஓட்டு சாவடி குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.1, 2, 8வது வார்டுக்கு பட்பயர் பகுதி, அரசு பாலிடெக்னிக் கல்லுாரி; 3வது வார்டுக்கு டாக்டர் பசுவைய்யா நகர் நகராட்சி ஆரம்ப பள்ளி; 4வது வார்டுக்கு வண்ணாரப்பேட்டை நகராட்சி ஆரம்ப பள்ளியில், இரு ஓட்டுசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.5வது வார்டுக்கு கோடப்பமந்து நகராட்சி ஆரம்ப பள்ளி; 6வது வார்டுக்கு லட்சுமி நாராயணபுரம் துாய இருதய ஆண்டவர் பள்ளி; 7, 12, 23வது வார்டுக்கு மேரிஸ் ஹில் பகுதி புனித சூசையப்பபள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது.ஒன்பதாவது வார்டுக்கு பிங்கர் போஸ்ட் புனித திரேசா உயர்நிலைப்பள்ளி; 10, 11வது வார்டுக்கு காந்தள் சுல்தான்பேட், சி.எஸ்.ஐ., ஆரம்ப பள்ளி; 13வது வார்டுக்கு ஸ்டேட் பாங்க் காலனி, சி.எஸ்.ஐ.சி.எம்.எம்., மேல்நிலைப்பள்ளி; 14வது வார்டுக்கு குல்முகமது சாலை, அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது.15வது வார்டுக்கு அரசு கலைக்கல்லுாரி: 16வது வார்டுக்கு ஓல்டு ஊட்டி நகராட்சி ஆரம்ப பள்ளி: 17வது வார்டுக்கு தாவரவியல் பூங்கா சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகம்; 18வது வார்டுக்கு பாம்பே கேசில் பகுதி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம்; 19வது வார்டுக்கு சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி; 20, 22வது வார்டுக்கு மியான் ஜிபேட் நகராட்சி ஆரம்ப பள்ளியில் ஓட்டுசாவடி அமைக்கப்பட்டுள்ளது.21வது வார்டுக்கு சி.எஸ்.ஐ., ஹோபார்ட் பள்ளி; 24 வார்டுக்கு காந்தள் புனித அந்தோணியர் ஆரம்ப பள்ளி; 25, 26வது வார்டுகளுக்கு காந்தள் ஓம் பிரகாஷ் பள்ளி; 27வது வார்டுக்கு முள்ளிக்கொரை நகராட்சி கட்டடம்; 28வது வார்டுக்கு டென் மேரி சி.எஸ்.ஐ.சி.எம்.எம்., பள்ளியில் ஓட்டு சாவடி அமைக்கப்பட்டுள்ளது.29வது வார்டுக்கு ராமகிருஷ்ணாபுரம் நகராட்சி பள்ளி; 30வது வார்டுக்கு தமிழ்நாடு வடிகால் வாரியம் உதவி பொறியாளர் அலுவலகம்; 31வது வார்டு ராமகிருஷ்ணாபுரம் நகராட்சி பள்ளி; 32, 34வது வார்டுக்கு புனித தாமஸ் ஆரம்ப பள்ளியில் ஓட்டு சாவடி அமைக்கப்பட்டுள்ளது.33 வது வார்டுக்கு தலையாட்டு மந்து நகராட்சி ஆரம்ப பள்ளி; 35வது வார்டுக்கு மஞ்சனக்கொரை புனித பிரான்சிஸ் ஆரம்ப பள்ளி; 36வது வார்டுக்கு லவ்டேல் புனித அந்தோணியர் உயர் நிலைப்பள்ளியில், ஓட்டு சாவடி அமைக்கப்பட்டுள்ளது.