| ஒரே வீடு, ஒரே வீதி... வார்டோ வேறுவேறு! வாக்காளர் பட்டியலில் குழப்பம் Dinamalar
ஒரே வீடு, ஒரே வீதி... வார்டோ வேறுவேறு! வாக்காளர் பட்டியலில் குழப்பம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 அக்
2019
00:49

அவிநாசி: அவிநாசி, 11வது வார்டில், ஒரே வீட்டில் வசிக்கும், ஒரே குடும்பத்து வாக்காளர்கள், இரு கவுன்சிலர்களுக்கு ஓட்டளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.அவிநாசி பேரூராட்சியில், வார்டு மறு சீராய்வு அடிப்படையில், 10வது வார்டாக இருந்த காமராஜர் வீதி, 11வது வார்டாக மாறியுள்ளது. சமீபத்தில், வெளியிடப்பட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில், இந்த வார்டில் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.காமராஜர் வீதியில், ஒரே வீட்டில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் ஓரிருவர், 11வது வார்டிலும், மற்றவர்கள், 7வது வார்டுக்குட்பட்ட வி.எஸ்.வி., காலனியிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால், ஒரே வீட்டில் வசிப்போர், இரு கவுன்சிலர்களுக்கு ஓட்டளிக்க வேண்டியுள்ளது.அதே போன்று, ஒரே வீதியில் அடுத்தடுத்த வீடுகளில் வசிப்போர் மற்றும் ஒரே 'அப்பார்ட்மென்டில்' அடுத்தடுத்த வீடுகளில் வசிப்போரில், பாதி வீட்டினர், 7வது வார்டிலும், எஞ்சிய வீட்டினர், 11வது வார்டிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால், ஒரு வீதிக்கு, இரு கவுன்சிலர் தேர்வு செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது; 400க்கும் மேற்பட்ட வாக்காளர்கள், இத்தகைய குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.வார்டு உறுப்பினர்க்கான இட ஒதுக்கீட்டில், 11 வது வார்டு, பொதுப்பிரிவினர்க்கும், 7 வது வார்டு, பெண்கள் பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை வாக்காளர் அடிப்படையில், இட ஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில், ஒரே வீடு, ஒரே வீதியில் வசிப்போர், இரு வார்டுகளில் சிதறியுள்ளதால், இட ஒதுக்கீட்டிலும் நம்பக்கதன்மை இல்லை என, வாக்காளர்கள் கூறுகின்றனர்.'இக்குழப்பத்தை தவிர்த்து, காமராஜர் வீதியில் வசிக்கும் வாக்காளர்களை அதே வார்டில் தொடர்வதற்குரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்' என, அப்பகுதியை சேர்ந்த சிலர், கலெக்டருக்கு மனு அளித்துள்ளனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X