| வடகிழக்கு பருவமழையால் திருப்பூர் நகரம் 'குளுகுளு' Dinamalar
வடகிழக்கு பருவமழையால் திருப்பூர் நகரம் 'குளுகுளு'
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 அக்
2019
00:49

திருப்பூர்: திருப்பூர் நகரப்பகுதியில் நேற்று பகலில் பெய்த கனமழையால், முக்கிய ரோடுகளில் மழைநீர் தேங்கியதால், வாகனங்கள் தத்தளித்து சென்றன.திருப்பூர் மாவட்டத்தில், தென்மேற்கு பருவத்தில், இயல்பு அளவை காட்டிலும் அதிகமாக மழை பெய்துள்ளது. சீரான மழைப்பொழிவால், நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது; கால்நடைகளுக்கான மேய்ச்சலுக்கும் தட்டுப்பாடு ஏற்படவில்லை.கடந்த, 1ம் தேதி முதல் வடகிழக்கு பருவம் துவங்கியுள்ளது. பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், மானாவாரி விவசாயிகள், தங்களது பணியை துவக்க தயாராகிவிட்டனர். கடந்த, 1ம் தேதி முதல், நேற்று வரையிலான, 16 நாட்களில், 3, 4, 6, 7, 9 மற்றும் 11ம் தேதிகளில் மட்டும் மழை பதிவாகவில்லை.மற்ற 10 நாட்களிலும், பருவமழை பெய்துள்ளது; குறைந்தபட்சமாக, சராசரியாக 4 மி.மீ., முதல், 15 மி.மீ., வரை பதிவாகியுள்ளது. கடந்த, 10 நாட்களில் இல்லாத அளவுக்கு, நேற்று பகலில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.திடீரென கனமழை பெய்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது; ரோட்டில் சென்றவர்கள், அருகே உள்ள கடைகளில் ஒதுங்கினர். ஊத்துக்குளிரோடு, கொங்கு மெயின் ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி பாலம், யூனியன் மில் ரோடு, பகுதிகளில் மழைநீர் ஆறு போல் ஓடியதால், வாகனங்கள் தத்தளித்துசென்றன.நகரின் பல பகுதிகளில், சாக்கடை கால்வாய் நிறைந்து, ரோட்டில் வழிந்ததால், மக்கள் நடமாட முடியாமல் சிரமப்பட்டனர். மழை ஓய்ந்த பிறகும், வெயில் இல்லாததால், நேற்றைய பகல் பொழுது, 'குளுகுளு' என்று இருந்தது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X