| தீபாவளி காற்று மாசு; 20ல் ஆய்வு துவக்கம் Dinamalar
தீபாவளி காற்று மாசு; 20ல் ஆய்வு துவக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 அக்
2019
00:50

திருப்பூர்: திருப்பூரில், வரும் 20ம் தேதி முதல் நவம்பர் 3ம் தேதி வரை, காற்று மாசு ஆய்வு நடத்த உள்ளது, மாசுகடடுப்பாடு வாரியம்.வரும் 27 ல் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது; பண்டிகைக்கு முன் ஏழு நாள்; பண்டிகைக்குப்பின் ஏழு நாட்கள் காற்றுமாசு ஆய்வு நடத்த மாசுகட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது.பனியன் நகரான திருப்பூரில், வெளிமாவட்டம், வெளிமாநிலங்களைச்சேர்ந்த பல லட்சம் தொழிலாளர் வசிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும், பண்டிகையையொட்டி அதிகளவு பட்டாசு ரகங்கள் வெடிக்கப்படுகின்றன.திருப்பூரில், வரும் 20ம் தேதி முதல் நவம்பர் 3ம் தேதி வரை காற்று மாசு ஆய்வு நடத்தப்பட உள்ளது. குமரன் வணிகவளாகம் மற்றும் ராயபுரத்தில் உள்ள பறக்கும்படை அலுவலகத்தில் 'ஆப்பியன் ஏர் குவாலிட்டி மெஷர்மென்ட்' கருவி வைக்கப்பட உள்ளது.காற்றில் கலந்திருக்கும் 10 மைக்ரானுக்கு கீழ் உள்ள துகள்கள்; 2.5 மைக்ரானுக்கு கீழ் உள்ள துகள்; சல்பர் டை ஆக்ஸைடு, நைட்ரஜன் டை ஆக்ஸைடு மற்றும் அலுமினியம், பேரியம், இரும்பு தாதுக்கள் அளவுகளையும் கணக்கிடப்பட உள்ளது. குடியிருப்புகள் மிகுந்த ராயபுரத்தில், ஒலி மாசு அளவு கணக்கிடப்பட உள்ளது.பண்டிகைக்கு முன், பண்டிகைக்குப்பின் பதிவாகும் அளவு அடிப்படையில், திருப்பூரில், காற்றை மாசுபடுத்தும் பட்டாசு ரகங்கள் அதிகம் வெடிக்கப்பட்டுள்ளனவா; பண்டிகைக்கு முன், பின் காற்று மாசு எப்படி உள்ளது என்கிற விவரங்கள் தெரியவரும்.அளவு நிர்ணயம்குடியிருப்பு பகுதியில், ஒலி அளவு காலை நேரம் 55 டெசிபெல்; இரவு நேரம் 45 டெசிபெல் அளவீட்டுக்குள் இருக்கவேண்டும். அமைதியான பகுதிகளில், காலை நேரம் 50 டெசிபெல், இரவு நேரம் 40 டெசிபெல் அளவுக்குள் இருக்கவேண்டும். வர்த்தக பகுதிகளில் காலை நேர ஒலி அளவு 65 டெசிபெல், மாலை நேரம் 55 டெசிபெல் அளவுக்குள் இருக்கவேண்டும்.காற்றில் கலந்திருக்கும் துண் துகள்களை பொருத்தவரை, 10 மைக்ரானுக்கு கீழ் உள்ள துகள்கள் அளவு, 100 மைக்ரோ கிராம்/ மீட்டர் க்யூப்; 2.5 மைக்ரானுக்கு கீழ் உள்ள துகள் அளவு, 60 மைக்ரோ கிராம்/ மீட்டர் க்யூப் அளவுக்குள் இருக்கவேண்டியது அவசியம். இந்த அளவுக்கு அதிகமாகும்போது, அந்த காற்று, சுவாசிக்க தகுதியற்றதாக கருதப்படும்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X