இரவு நேர கடைகள் இல்லை...! 'சிங்கிள் டீ'க்கு பயணிகள் தவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2019
00:53

திருப்பூர்: தொழிலாளர்களின் அயராத உழைப்பால் உயர்ந்த 'டாலர் சிட்டி'க்கு, 'துாங்கா நகரம்' என்ற அந்தஸ்தை வழங்க, தமிழக அரசு முன்வர வேண்டும்.துாங்கா நகரம் என்றழைக்கப்படும் மதுரைக்கு இணையாக, பல மாவட்ட மக்கள் வசிக்கும் திருப்பூரும் துாங்காமல் உழைக்கும் நகராக மாறி வருகிறது. பனியன் நிறுவனங்கள் நள்ளிரவு வரையிலும், சாய ஆலைகள், விசைத்தறிகள் இரவு முழுவதும் இயங்குகின்றன.இரவு, 10:00 மணிக்கு மேல் கடைகள் மூடப்பட வேண்டும் என்பது, போலீசாரின் உத்தரவு. வெளிமாவட்ட மக்களும், வெளிமாநில மக்களும், இரவு, பகல் பாராது திருப்பூருக்கு வந்து செல்கின்றனர். ஆண் டுக்கு, 26 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யும் திருப்பூர், பல வசதிகளை எதிர்பார்த்து காத்திருக்கிறது.தமிழக அரசு, இரவு முழுவதும் வணிக வளாகங்கள், கடைகள் செயல்படலாம் என அரசாணை வெளியிட்டுள்ளது. இருப்பினும், சட்டம் - ஒழுங்கு என்ற காரணம் கூறி, இரவில் இயங்க இதுவரை அனுமதி வழங்கியதாக தெரியவில்லை.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வடமாநிலங்களில் இருந்து, தினமும் நுாற்றுக்கணக்கான தொழிலாளர், 'டாலர் சிட்டி'யை நாடி வருகின்றனர். இருப்பினும், இரவு நேர ஓட்டல், பஸ் வசதி இல்லாமல், ரோட்டிலேயே அடைக்கலம் புகுந்துவிடுகின்றனர்.பனியன் நிறுவனங்கள், அவசரமாக ஆர்டர்களை அனுப்ப வேண்டி, இரவு நேரங்களில் இயங்கவும் வழிவகை செய்ய வேண்டும். மாவட்ட தலைநகராக இருந்தும், இரவு, 10:00 மணிக்கு மேல் பெரும்பாலான ஊர்களுக்கு பஸ் வசதி இல்லை.இரவு, 11:00 மணிக்கு மேல் சிங்கிள் டீ கூட கிடைக்காத சூழல் இருக்கிறது. பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் சுற்றுப்பகுதியில், இரவு நேர கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி வழங்க வேண்டும்.திருப்பூரில் இருந்து, முக்கிய வழித்தடங்களில் இரவு நேர பஸ் இயங்க வேண்டும். ஒரு மணி நேர இடைவெளியில், மினி பஸ், டவுன் பஸ்கள் இயங்கினால், பெண்கள் உட்பட அனைவரும் அச்சமின்றி சென்று வரலாம்.வெளிமாவட்ட தொழிலாளர், சொந்த ஊர்களுக்கு சென்றுவர, இரவு பஸ் அவசியம். பஸ் போக்குவரத்து, 24 மணி நேரமும் இயங்கினால், வெளி மாவட்ட தொழிலாளரின் சிரமங்கள் முற்றிலும் நீங்கும். அரசு தரப்பு ஏற்கனவே, பச்சைக்கொடி காட்டிவிட்டது.மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து, துாங்கா நகரமாக திருப்பூர் செயல்பட, தகுந்த நடவடிக்கை எடுக்கலாம் என்பது, லட்சக்கணக்கான தொழிலாளரின் ஏகோபித்த எதிர்பார்ப்பு.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X