புதுச்சேரி:ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரியில் மரக்கன்று நடும் விழா நடந்தது.விழுப்புரம் மாவட்டம், கெங்கராம்பாளையத்தில் உள்ள ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரியில் நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை அமைப்பு சார்பில் மரம் நடும் விழா நடந்தது.
கல்லுாரி துணை தலைவர் முகமது இலியாஸ், செயலர் சிவராம் ஆல்வா, கல்லுாரி முதல்வர் மகேந்திரன், துணை தலைவர் மெட்டில் டா மற்றும் அனைத்து பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.கல்லுாரி தலைவர் ராஜா, வேலைவாய்ப்பு துறை பேராசிரியர் ஆஷா கல்லுாரி வளாகத்தில் மரக்கன்று நட்டு விழாவை தொடங்கி வைத்தனர். அவர்களை தொடர்ந்து பேராசிரியர்கள், மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டு, இயற்கையை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஏற்பாடுகளை நாட்டு நலப் பணி மற்றும் இளைஞர் செஞ்சிலுவை திட்ட அலுவலர்கள், பேராசிரியர்கள், கிரிதரன், ஜாக்குலின் ரோஸி, தனலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.