சரக்கு வாகனங்களில் விபரீத பயணம் போலீசாரும் கண்டுகொள்வதில்லை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2019
00:58

மடத்துக்குளம்: மடத்துக்குளம் பகுதியில் சரக்கு வாகனங்களில், ஆபத்தான நிலையில் மக்கள் பயணிப்பதை தடுக்க, போலீசார், போக்குவரத்துத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மடத்துக்குளம் விவசாயம் சார்ந்த பகுதி. அமராவதி, புதிய ஆயக்கட்டு மற்றும் பழைய ஆயக்கட்டில் நெல், கரும்பு, வாழை, மக்காச்சோளம் பயிராகிறது. இது தவிர, தனியார் நுாற்பு ஆலைகள், செங்கல் சூளைகள் மற்றும் பல தொழில்கள் நடக்கிறது. சில நிறுவனங்கள் தொழிலாளர், பயன்பாட்டுக்காக பஸ் மற்றும் வேன்களை பயன்படுத்துகின்றன. விளைநிலம் மற்றும் சில நிறுவனங்களுக்கு வேலைக்குச்சென்று திரும்ப தொழிலாளர்கள் சரக்கு வாகனத்தை பயன்படுத்துகின்றனர்.வணிக ரீதியாக உருவாக்கப்படும் வாகனங்கள், சரக்குகளை ஏற்றிச்செல்லும் விதமாக கட்டமைக்கப்படுகின்றன. இதில் பொதுமக்கள் பயணிக்க தேவையான அளவு வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை. ஆனால், இதன் ஆபத்தை உணராமல் பலரும் இதில் பயணிக்கின்றனர்.முக்கியமாக, தொழிலாளர்கள் அதிகளவு சரக்கு வாகனங்களை பயன்படுத்துகின்றனர். இதனால், விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதைத்தவிர்க்க போலீசார், போக்குவரத்துத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X