பொது நூலகத்தில் அதிகாரிகள் ஆய்வு ஆபத்தான கட்டடத்துக்கு மாற்று ஏற்பாடு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2019
01:02

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பொது நுாலகத்துக்கு மாற்று இடம் அளிக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.


இதனால், ஆக்கிரமிப்பு இடம் மீட்கப்படும் என்ற நம்பிக்கை நுாலக ஆர்வலர்கள், வாசகர்களிடையே ஏற்பட்டுள்ளது.பொள்ளாச்சி மரப்பேட்டையில், பொது நுாலக துறைக்கு சொந்தமான கிளை நுாலகம் அமைந்துள்ளது. கடந்த, 1954ல் அமைக்கப்பட்ட இந்த நுாலகத்தில் தற்போது, 98,013 புத்தகங்கள் உள்ளன; 15,540 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.நுாலகத்தின் மேற்கூரையில், நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது. சுவர் மற்றும் மேற்கூரையில், மரங்களின் வேர்கள் ஊடுருவி அபாயகரமான நிலையில் காணப்படுகிறது. நுாலகத்தின் பலவீனமான நிலையால், கடந்தாண்டு முதல் கட்டடத்தின் ஒரு பகுதியில் வாசகர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.


அபாயகரமான சூழலால், புத்தகங்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது. இடப்பற்றாக்குறையால், வாசகர்கள் அமர்ந்து படிக்க கூட முடியாத நிலை உள்ளது. நுாலகத்துக்கு புதுக்கட்டடம் அமைக்க பொது நுாலகத்துறையில் நிதி ஒதுக்கப்பட்டும், மாற்று இடம் இல்லாததால், கட்டுமான பணி பல ஆண்டுகளாக இழுபறியில் உள்ளது.மகாலிங்கபுரம் ரவுண்டானா அருகே உள்ள நுாலகத்துறைக்கு சொந்தமான இடம், கடந்த காலத்தில் வகை மாற்றம் செய்யப்பட்டு, தனியாருக்கு விற்கப்பட்டுள்ளது சமீபத்தில் கண்டறியப்பட்டது. அந்த இடத்தை மீட்டு, நுாலகத்துக்கு புது கட்டடம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.புதுக்கட்டடம் அமைக்கும் வரை, நுாலகம் செயல்பட தற்காலிக மாற்று இடமாவது வேண்டும் என்ற கோரிக்கையும் மூன்று ஆண்டுகளாக நிறைவேறவில்லை. இந்நிலையில், நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் ராம துரைமுருகன், வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார் மற்றும் வருவாய் துறையினர் நுாலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, நுாலகத்துக்கு மாற்று இடம் வழங்குவது குறித்து பேசினர்.


பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் இருந்த நுாலக பிரச்னைக்கு வருவாய் துறை அதிகாரிகள் முக்கியத்துவம் கொடுக்க துவங்கியுள்ளது, நுாலக ஆர்வலர்கள், வாசகர்கள் இடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.பரிசீலனையில் தாலுகா அலுவலகம்! டி.ஆர்.ஓ., கூறியதாவது:நுாலக கட்டடம் அமைக்க மாற்று இடம் அளிக்க வேண்டும் என வருவாய் துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தற்போது நுாலகம் அமைந்துள்ள பகுதியை அடுத்துள்ள கந்தசாமி பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளோம். மேலும், நுாலகத்துக்கு தானமாக அளிக்கபட்டு, பிறகு வகை மாற்றம் செய்து விற்கப்பட்ட மகாலிங்கபுரத்தில் உள்ள, 23 சென்ட் இடத்தையும் ஆய்வு செய்கிறோம்.நுாலக கட்டடம் அமைக்க தகுதியான இடம் தேர்வு செய்து அளிக்கும் நோக்கில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.


மேலும், தாலுகா அலுவலகம் புது கட்டடத்துக்கு மாற இருப்பதால், பழைய கட்டடத்தில் தற்காலிகமாக நுாலகம் இயங்க அனுமதிக்குமாறு கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. அது குறித்தும் பரிசீலனை செய்யப்படும். இவ்வாறு, தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X