நடவடிக்கை! தடை செய்யப்பட்டுள்ள பட்டாசு விற்றால்...தயார் நிலையில் தீயணைப்புத் துறை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2019
01:30

தீபாவளி கொண்டாட்டத்தில் பட்டாசு முக்கிய இடம் பிடிக்கிறது. பண்டிகைக்கு ஒரு மாதம் முன்னரே, பட்டாசு கடைகள் திறக்கப்பட்டு, மக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால், இந்தாண்டு தீபாவளி வரும் 27 ம் தேதி கொண்டாடப்படுகிறது. பண்டிகைக்கு ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், புதுச்சேரியில் பட்டாசு விற்பனை இதுவரை சூடுபிடிக்கவில்லை.


சீன பட்டாசு விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்ததில் இருந்து, வியாபாரிகளுக்கு கெடுபிடி மற்றும் உரிமம் வழங்குவது, புதுப்பித்தல் நடைமுறைகள் உள்ளிட்ட காரணங்கள் ஒருபுறம், பட்டாசு வெடிக்கும் நேரம் குறைப்பு உள்ளிட்ட பல காரணங்களால், பட்டாசு விற்பனையும் காலப்போக்கில் டல் அடிக்கிறது.புதுச்சேரியில் 500 பட்டாசு கடைகள் மூலம், ஆண்டு தோறும் சுமார், ரூ. 20 கோடிக்கு குறையாமல் வியாபாரம் நடந்து வருகிறது. இந்த ஆண்டு, புதுச்சேரி, மாகி, ஏனம், காரைக்கால் ஆகிய பிராந்தியங்கள் சேர்த்து, 60 புதிய கடைகள் நடத்த விண்ணப்பித்துள்ளனர்.அந்த விண்ணப்பங்கள் வருவாய் துறையிடமிருந்து, தீயணைப்பு துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, நேரடியாக ஆய்வு நடத்திய தீயணைப்பு துறையினர், 50 விண்ணப்பங்களை ஓகே செய்து பரிந்துரை செய்துள்ளனர். அதையடுத்து, புதுச்சேரியில் பட்டாசு கடைகள் ஓரளவு திறக்கப்பட்டுள்ளது.


கட்டுப்பாடு


எளிதில் தீப்பற்றும் சீன பட்டாசுகள், மேலே சென்று வெடிக்கும் பட்டாசுகளால் அதிகம் தீ விபத்து நடப்பதால், அப்படிப்பட்ட பட்டாசுகள் விற்பனைக்கு வருவாய் துறை தடை செய்துள்ளது. தடை செய்யப்பட்டுள்ள பட்டாசுகளை விற்றாலோ, வைத்திருந்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். உரிமம் இல்லாமல் பட்டாசு விற்பனை செய்யக் கூடாது.அனுமதி பெற்ற இடத்தின் வரைபடத்துடன் உரிமத்தை கடையில் வைத்திருக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். சிறுவர்களை பட்டாசு வியாபாரத்தில் ஈடுபடுத்தக் கூடாது. 'புகை பிடிக்க தடை' என்ற எச்சரிக்கை பலகை, தீயணைப்பு உபகரணங்கள் வைக்க வேண்டும். கடையை அலங்கரிக்க வண்ண விளக்குகள் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளனர். விதிமுறைகள் மீறப்படுகிறதா என்பதை கண்காணிக்க வருவாய்த்துறையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.


தீயணைப்பு துறை 'உஷார்'


புதுச்சேரி, கோரிமேடு, மடுகரை, திருக்கனுார், வில்லியனுார், பாகூர், காலாப்பட்டு, திருபுவனை, சேதராப்பட்டு ஆகிய 9 தீயணைப்பு நிலையங்களில், தீயணைப்பு வீரர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது தவிர, அரியாங்குப்பத்தில் தற்காலிகமாக தீயணைப்பு வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட உள்ளது.தீபாவளி முதல் நாள் துவங்கி, மூன்று நாட்களுக்கு மூன்று மொபைல் தீயணைப்பு வாகனங்கள் இயக்கப்பட உள்ளன. எந்த பகுதிக்கும் உடனடியாக இந்த வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, புதுச்சேரி கோட்ட தீயணைப்பு அதிகாரி இளங்கோ தெரிவித்தார்.


பட்டாசு எடுத்து செல்ல 'தடை'


புதுச்சேரியில் பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலைகள் இல்லை, திருக்காஞ்சி, சன்னியாசிக்குப்பம், பாகூர் குருவிநத்தம், மண்ணாடிப்பட்டு, கரையாம்புத்துார், அரியாங்குப்பம் உள்ளிட்ட இடங்களில் நாட்டு வெடிகள் தயாரிக்க அனுமதி உள்ளது. தீபாவளிக்கு, சிவகாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பட்டாசுகள் கொண்டுவரப்படுகிறது.இந்நிலையில், புதுச்சேரியில் இருந்து செஞ்சிக்கு கடந்த 30ம் தேதி பட்டாசு ஏற்றிச் சென்றபோது ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் இறந்ததும், அதையடுத்து, கரையாம்புத்துாரில் பட்டாசு தயாரிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் 5 பெண்கள் உயிரிழந்த சம்பவமும் நடந்ததால், இந்த ஆண்டு, பட்டாசு விற்பனை மற்றும் உற்பத்தி செய்யும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு நடைமுறைகள் கையாள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் இருந்து நாட்டு வெடிகளை வெளியூருக்கு எடுத்து செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X