சம்பளம் வழங்காததை கண்டித்து பாப்ஸ்கோ ஊழியர்கள் முற்றுகை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2019
01:33

புதுச்சேரி:சம்பளம் வழங்காததை கண்டித்து பாப்ஸ்கோ ஊழியர்கள், குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.


அரசு சார்பு நிறுவனமானபாப்ஸ்கோ நிறுவனத்தில் 1050 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 26 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. பட்ஜெட்டில் ஒதுக்கிய 7 கோடி ரூபாயில் இருந்து சம்பளம் வழங்க கோரி பாப்ஸ்கோ ஊழியர்கள்போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் நீதிமன்ற உத்தரவின்படி அரிசிக்கான நிலுவை தொகையை செலுத்திவிட்டு மீதமுள்ள தொகையில் சம்பளத்தை வழங்க குடிமைப் பொருள் வழங்கல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.இதனை கண்டித்து பாப்ஸ்கோ ஊழியர்கள் ஒருங்கிணைப்பாளர் கோவர்த்தனன் தலைமையில் நேற்று குடிமை பொருள் வழங்கல் துறையை முற்றுகையிட்டனர். தடையை மீறி உள்ளே நுழைந்த ஊழியர்கள் நுழைவு வாயிலில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் திடீர் பதட்டம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு போராட்டம் நடத்திய 54 பெண்கள் உள்பட 117 ஊழியர்களை டி.நகர் போலீசார்கைது செய்து வேனில் ஏற்றிச் சென்று அப்புறப்படுத்தினர்.


ஒருங்கிணைப்பாளர் கோவர்த்தனன் கூறுகையில், கடந்த 2015ம் ஆண்டு இலவசஅரிசிக்கான பணம் ஊழியர்களுக்கு சம்பளமாக போடப்பட்டது. இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் 4.50கோடி ரூபாயை கோர்ட்டில் துறைகட்டியது. தற்போது, அந்த தொகையை கழித்துக்கொண்டு சம்பளம் போட குடிமை பொருள் வழங்கல் துறை முடிவு செய்துள்ளது.பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 7 கோடி ரூபாயை, ஊழியர்களின் சம்பளத்திற்கு மட்டுமேசெலவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். அப்படி இருந்தும் இதுவரை சம்பளம் போடவில்லை. அடுத்தகட்டமாகதலைமை செயலகத்தை முற்றுகையிட முடிவு செய்துள்ளோம் என்றார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X