குப்பையில் வீசப்படும் பழைய துணிகளில் பை, திருவொற்றியூரில் மாநகராட்சி அசத்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

17 அக்
2019
03:25
பதிவு செய்த நாள்
அக் 17,2019 01:58

திருவொற்றியூர்: குப்பையில் சேகரமாகும் பழைய துணிகளில், கைப்பை தைக்கும் புதிய முயற்சியில், திருவொற்றியூர் துப்புரவு பிரிவு களமிறங்கியுள்ளது.


சென்னை மாநரகராட்சி, திருவொற்றியூர் மண்டலத்தில் சேகரிக்கப்படும் குப்பையை, தரம் பிரித்து, பல வகைகளில், அவற்றை மறுசுழற்சி செய்து பயன்படுத்தி வருகின்றனர்.அதன்படி, சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை உள்ளிட்ட பழங்களின் தோல் கழிவுகளை, ஜூஸ் கடைகளில் இருந்து சேகரித்து, பதப்படுத்தி, அரைத்து, பாத்திரம் துலக்கும் பவுடர் தயாரித்து, அதை, 'அம்மா' உணவகங்களுக்கும், கேட்போருக்கும் கொடுத்து வருகின்றனர்.


அரைப்பு கூலி மட்டும் அதிகமாக இருப்பதால், மிஷின் இருந்தால், இந்த முயற்சியை தீவிரமாக மேற்கொள்ளலாம் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.குப்பையில் தரம் பிரித்து பெறப்படும் டயர்கள், சமீபத்தில், மொத்தமாக விற்பனை செய்யப்பட்டு, அதன் மூலமாக ஊழியர்களுக்கு, கிப்ட் பாக்ஸ், ஆயுதபூஜை கொண்டாட்டம் நடைபெற்றது.அந்த வரிசையில், புது முயற்சியாக, வீடுகளில் சேகரிக்கப்படும் பழைய துணிகளில் இருந்து, கைப்பை தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது. ஓரளவிற்கு நல்ல முறையில் உள்ள துணிகள், இதற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றன.ராட்சத டிரம்களில், சோப்புத்துாள் கலந்த தண்ணீரில், ஒன்றுக்கு மூன்று முறை, நன்கு அலசி சலவை செய்யப்படுகின்றன. உலர்த்திய பின், 1 - 5 கிலோ வரை எடை தாங்கும் அளவிற்கு, பல்வேறு வகைகளில், துணிப்பைகள் தைக்கப்படுகின்றன.


இதற்கென, வார்டு, 5, 10, 11ல் தலா, ஒரு தையல் மிஷின், ஆறு ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தினமும், 50 கிலோ அளவிலான துணிகள் சேகரிக்கப்படுவதாகவும், குறைந்தது, 100 கைப்பைகளாவது தைக்க முயற்சி நடப்பதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.'இந்த பைகளை, கடைகளில் வாங்கிக் கொள்ள கேட்டுள்ளோம்.


மேலும், இயற்கை உரம் வாங்கிச் செல்வோருக்கு, உரத்தை கொடுத்து அனுப்பவும் பயன்படுத்த உள்ளோம்' என்கின்றனர் துப்புரவு அதிகாரிகள்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
17-அக்-201909:24:56 IST Report Abuse
Girija அப்படியே பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களையும் குப்பையில் இருந்து எடுத்து கங்கையில் கழுவி பயன்படுத்தலாமே? கொஞ்சமாவது சுகாதாரம் பற்றிய அறிவு மாநகராட்சிக்கு இருக்க வேண்டும். பழைய துணிகள் மூலம் தோற்று நோய் பரவும் , அதை தைப்பவர்களுக்கும் சரி உபயோகிப்பவர்களுக்கும் சரி . இதற்குப்பதிலாக கோஆப் டெக்ஸ் மூலம் பருத்தி துணிகளை வாங்கி புது துணிகளிலேயே பைகள் தயாரித்து விற்பனை செய்ய்யலாமே? நீங்கள் ஏற்கனவே கொடுக்கப்பட்ட்ட பணிகளை தினமும் சரியாக செய்து மாநிலத்தில் சாக்கடை அடைப்பு , கழிவுநீர் குடிநீருடன் கலப்பது, குடிநீர் குழாய் உடைப்புகளை தவிர்த்தல் , குப்பைக்கிடங்குகளை எரியவிட்டு காற்றை மாசு படுத்தாமல் இருத்தல் , காலரா, டெங்கு, டொங்கு, மங்கு, போன்ற வியாதிகள் இல்லாமல் பார்த்துக்கொண்டாலே போதும். இந்த அரிஸ்ட்டாட்டில் வேலைகளுக்கு என்றே தனியாக சிலர் உள்ளனர்.
Rate this:
Cancel
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
17-அக்-201908:58:24 IST Report Abuse
Rangiem N Annamalai அருமை .அனைவரும் இதை செய்யலாம் ?.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X