சிதம்பரம்:சிதம்பரம் அச்சகத்தார் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிதம்பரம் வட்ட அச்சகத்தார் சங்க பொதுக்குழுக் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது.
சங்க தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். ரமேஷ் வரவேற்றார். வரவு, செலவு கணக்குகள் மற்றும் சங்க வளர்ச்சி, உள்ளாட்சி தேர்தல் எதிர்கொள்வது, பொதுவான விலை நிர்ணயங்கள் போன்றவை ஆலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதனை தொடர்ந்து சங்க புதிய நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். சங்க தலைவராக மணிபாரதி அச்சகம் மணிவண்ணன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
துணை தலைவராக ஜனகம் பிரின்டர்ஸ் ரமேஷ், செயலாளர் - செந்தில் பிரின்டர்ஸ் துரை செந்தில்குமார், இணை செயலாளர் - ஸ்ரீராம் பிரின்டர்ஸ் முத்துக்குமார், பொருளாளராக தாயகம் அச்சகம் கல்யாணசுந்தரம் தேர்வு செய்யப்பட்டனர்.செயற்குழு உறுப்பினர்களாக ராஜா பிரின்டர்ஸ் உபேஷ்குமார், அருணா பிரின்டர்ஸ் பாக்யராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முன்னாள் நிர்வாகிகள் மூர்த்தி, சங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.