பழுதான மேம்பாலம் இடிந்து விழுந்தது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2019
22:05

பாகூர்:புதுச்சேரி - கடலுார் சாலை இடையார்பாளையம் அருகே பழுதான நிலையில் இருந்த மேம்பாலம், நேற்று திடீரென இடிந்து விழுந்தது.


புதுச்சேரி - கடலுார் சாலையில், நோணாங்குப்பம் முதல் இடையார்பாளையம் வரை, இரண்டு சாலைகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த இரண்டு சாலையிலும், ஒரு பெரிய பாலமும், 2 சிறிய பாலங்களும் உள்ளன.பழைய சாலையில், இடையார்பாளையம் ஓடையின் குறுக்கே உள்ள பாலம், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் உள்வாங்கியது. அதன்பின், அவ்வழியாக வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், புதிய சாலையில் போக்குவரத்து தடைபடும் நேரங்களில், அதற்கு இணையாக மேற்கு பகுதியில் உள்ள பழைய சாலையில் வாகனங்கள் செல்கின்றன.



இந்நிலையில், இடையார்பாளையம் என்.ஆர். நகர் சந்திப்பு அருகே, பழுதான நிலையில் இருந்த, 30 மீட்டர் நீளம் கொண்ட மேம்பாலம், நேற்று அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது.இது குறித்து தகவலறிந்த தெற்கு போக்குவரத்து எஸ்.பி., சுப்ரமணியன், இன்ஸ்பெக்டர் தனசேகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று, இடிந்த விழுந்த பாலத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து, அவ்வழியாக வாகனங்கள் செல்லாத வகையில், பேரிகார்டுகள் மூலமாக தடுப்பு அமைத்தனர்.பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் மகாலிங்கம் உள்ளிட்ட அதிகாரிகள், இடிந்து விழுந்த பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.


மரங்களால் வலுவிழக்கும் பாலம்


நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றின் குறுக்கே, பிரெஞ்ச் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட மேம்பாலம், பல இயற்கை சீற்றங்களை எதிர்கொண்டுள்ளது. தற்போது சற்று பலவீனமான நிலையில் உள்ள இந்த பாலத்தில், சாலை புனரமைக்கப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வருகிறது.இந்த பாலத்தின் பக்கவாட்டு சுவர்களிலும், துாண்களிலும் மரங்கள் வேரூன்றி வளர்ந்து வருகின்றன. இவை நன்கு வளர்ந்தால், பாலம் மேலும் வலுவிழந்து இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே, பாலத்தின் துாண்கள் மற்றும் சுவர்களில் வளரும் செடிகள் மற்றும் மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
18-அக்-201907:28:03 IST Report Abuse
Darmavan செடிகளை எடுத்துவிட்டால் திரும்ப கட்டும் காண்ட்ராக்ட் பணம் வருமானம் பாதிக்கப்படாதா?
Rate this:
Share this comment
Cancel
Ray - Chennai,இந்தியா
18-அக்-201905:53:42 IST Report Abuse
Ray மேம்பாலம்? ஆற்றின் குறுக்கே பாலம் தேவை மற்றும் வெள்ளைப் பெருக்கு குறைவான இடங்களில் தரைப்பாலம் மேம்பாலம் - ஒரு சாலை அல்லது ரயில் பாதையின் மீது கடக்க கட்டப்படுவது பலமட்டப்பாலங்கள் தற்கால நவீன ஏற்பாடு தமிழை சரியாக தெரிந்து கொள்வோம்
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
18-அக்-201905:49:44 IST Report Abuse
D.Ambujavalli பாலத்து சுவர்கள், தூண்களில் செடிகள் வளர ஆரம்பிக்கும்போதே களைய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். வளர்ந்த மரங்கள் பாலத்தை பலவீனப்படுத்த, விரைவில் இடிந்துவிடும் இதைக் கவனிக்க வேண்டிய பொ. ப. துறையின் கவனக்குறைவால் விபத்துகள் ஏற்படும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X