| திணறல்! சாராயம் சப்ளை செய்ய அதிகாரிகள்,,,,சாராயஆலை ஊழியர்கள் போராட்டம் எதிரொலி Dinamalar
திணறல்! சாராயம் சப்ளை செய்ய அதிகாரிகள்,,,,சாராயஆலை ஊழியர்கள் போராட்டம் எதிரொலி
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

18 அக்
2019
01:54
பதிவு செய்த நாள்
அக் 17,2019 23:00

வில்லியனுார்:சாராய ஆலையில் ஊழியர்கள் நேற்று மூன்றாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், கடைகளுக்கு சாராயம் சப்ளை செய்ய முடியாமல் அதிகாரிகள் திணறினர்.


வில்லியனுார் அடுத்த ஆரியப்பாளையம் கிராமத்தில், புதுச்சேரி அரசின் வடிசாராய ஆலை இயங்கி வருகிறது. இங்கு 186 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள், தங்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி சம்பளம் மற்றும் பண்டிகை கால வெகுமதி கூப்பன்கள் வழங்கப்படாததை கண்டித்து, கடந்த 15ம் தேதி காலை முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மூன்றாவது நாளாக போராட்டம் தொடர்ந்தது. ஊழியர்கள் சங்க நிர்வாகிகளிடம், ஆலை சேர்மன் விஜயவேணி பேச்சுவார்த்தை நடத்தினார். உடனடியாக 7வது ஊதியக்குழு பரிந்துரை சம்பளம் வழங்கினால் மட்டுமே பணியில் ஈடுபடுவோம் என ஊழியர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். இந்நிலையில், சாராயக்கடை உரிமையாளர்கள், கடைகளுக்கு சாராயம் வழங்கவேண்டும் என வலியுறுத்தி, சேர்மன் விஜயவேணியை முற்றுகையிட்டனர்.


மேலும், சாராயம் சப்ளை செய்யமுடியவில்லை என எழுத்து பூர்வமாக கொடுத்தால், அதனை கலால் துறையில் கொடுத்து, கிஸ்தி தொகையை குறைத்துக் கொள்வோம் என கூறினர். அலுவலக பணியாளர்களை வைத்து தற்காலிகமாக கடைகளுக்கு சாராயம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக சேர்மன் உறுதியளித்தார்.


ஊழியர்கள் மற்றும் சாராயக்கடை உரிமையாளர்கள் ஒரே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால், எஸ்.பி., ரங்கநாதன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். ஊழியர்களின் தொடர் போராட்டத்தினால், நேற்றும் கடைகளுக்கு சாராயம் சப்ளை செய்ய முடியாமல் அதிகாரிகள் திணறினர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X