புதுச்சேரி:'பல்லாயிரம் ஆண்டுகள் அ.தி.மு.க., நிலைத்து நிற்கும்' என, அன்பழகன் எம்.எல்.ஏ., பேசினார்.
அ.தி.மு.க., 48ம் ஆண்டு தொடக்க விழாவில் அவர் பேசியதாவது:தி.மு.க. என்ற தீய சக்தியை அரசியல் அரங்கிலிருந்து அகற்றுவதற்காக எம்.ஜி.ஆரால் கண்டெடுக்கப்பட்ட இயக்கம்தான் அ.தி.மு.க., எந்த நோக்கத்திற்காக அ.தி.மு.க. ஆரம்பிக்கப்பட்டதோ அதை நிறைவேற்றியவர் எம்.ஜி.ஆர்.அவரது மறைவிற்குப் பிறகு ஜெ., இந்த இயக்கத்தை அகில இந்திய அளவில் மாபெரும் இயக்கமாக மாற்றினார். இந்திய அரசியல் அரங்கில் ஒப்பற்ற தலைவராக விளங்கியவர்; எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும், தன் மனதிற்கு நியாயம் என்று பட்டதை, ஒளிவு மறைவின்றி பேசக் கூடியவர்.
ஜெ., மறைவிற்குப்பிறகு இந்த இயக்கத்தை அழித்துவிடலாம் என தி.மு.க. கனவு கண்டது. ஆனால் அக்கனவை தவிடுபொடியாக்கி, தமிழக முதல்வர் இ.பி.எஸ், துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் சிறப்பாக வழிநடத்தி வருகின்றனர். அ.தி.மு..க.வை அழித்துவிட நினைத்தவர்களுக்கு மரண அடி விழுந்துள்ளது.கடைசி அடிமட்டத் தொண்டன் இருக்கும்வரை அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. ஜெ., கூறியதுபோல, இந்த இயக்கம் பல்லாயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கும்.இவ்வாறு அவர் பேசினார்.