புது மாப்பிள்ளை கொலையில் நண்பர்கள் ஐந்து பேர் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2019
23:02

புதுச்சேரி:புதுமாப்பிள்ளை கொலை வழக்கில் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.


புதுச்சேரி, குயவர்பாளையம் கருணாகர பிள்ளை தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் ஆனந்தபாலாஜி (31); எலக்ட்ரீஷியன். வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார்.இவருக்கு திருமணமாகி 25 நாட்களே ஆகிறது. நேற்று முன்தினம், ரெட்டியார்பாளையம் விவேகானந்தா நகரில் ஒரு கடையில், டீ குடித்துக் கொண்டிருந்த ஆனந்தபாலாஜியை ஒரு கும்பல் சரமாரியாக கத்தியால் வெட்டிவிட்டு தப்பியது.


படுகாயங்களுடன் ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் ஆகியோர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.அதில், ஆனந்தபாலாஜியை கொன்றவர்கள் குயவர்பாளையத்தை சேர்ந்த விக்கி, சிவசங்கரன், விக்னேஸ்வரன், ஸ்டீபன், மதன் என தெரிய வந்தது. அதே பகுதியில் பதுங்கி இருந்த 5 பேரையும், போலீசார் இரவோடு இரவாக மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணைக்கு பிறகு போலீசார் கூறியதாவது:ரெட்டியார்பாளையம் சிவகாமி நகர் அருள் (35), குயவர்பாளையம் மணிகண்டன் (32), திலாஸ்பேட்டை கிஷோர் (24) ஆகிய மூவரும், ஆனந்தபாலாஜிக்கு வட்டி பணம் வசூல் செய்து தருவது வழக்கம். அதற்காக, அவர்கள் மது குடிக்க ஆனந்தபாலாஜி பணம் கொடுத்து வந்து வந்தார். ஆனால் அவர்கள், வட்டி பணத்தையும் சேர்த்து மது குடித்து செலவழித்து வந்தனர்.


இதை தட்டிக்கேட்ட ஆனந்த பாலாஜியை கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர்.புகாரின்பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து அருள் உள்பட 3 பேரையும் கைது செய்தனர். எனினும் ஆத்திரம் தீராத ஆனந்த பாலாஜி, விக்கியை அணுகி அருள் உள்பட 3 பேரையும் கொலை செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார். நண்பர்களான அருள் உள்ளிட்ட மூவரையும் கொலை செய்ய அவர் மறுத்தார். ஆனந்த பாலாஜி, வேறு ஆட்களை வைத்து மூவரையும் கொலை செய்கிறேன் என சவால் விடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆனந்த பாலாஜியை வெட்டி கொலை செய்துள்ளார்.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X