வெள்ளாற்றில் தடுப்பணை கட்டும் இடம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2019
00:25

புவனகிரி:புவனகிரி அருகே ஆதிவராக நல்லுார் வெள்ளாற்றில் நிரந்தர தடுப்பணை கட்டுவது குறித்து, வேளாண்மை துறை முதன்மை செயலர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார்.



புவனகிரி அருகே ஆதிவராகநல்லுாரில் நிரந்தர தடுப்பணை அமைக்க வேண்டும் என, அரசுக்கு பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். அதன் பேரில், கடலுார் மாவட்டத்திற்கு வந்த வேளாண்மை துறை முதன்மை செயலர் ககன்தீப் சிங், அதிகாரிகளுடன் ஆதிவராகநல்லுார் வெள்ளாற்றை நேற்று, பார்வையிட்டார்.தடுப்பணை மதிப்பீடு குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். கலெக்டர் அன்புச்செல்வன், டி.ஆர்.ஓ., ராஜகிருபாகரன், சிதம்பரம் சப் கலெக்டர் விசுமகாஜன், பொதுப்பணித்துறை திட்ட மதிப்பீட்டு பொறியாளர் கீதா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.அப்பகுதியை சேர்ந்தவர்கள் வெள்ள காலத்தில் ஏற்படும் பாதிப்பு, உப்புத் தண்ணீர் எதிர்த்து பாய்வதால் நிலத்தடி நீர்மட்டம் மற்றும் விவசாயம் மிகவும் பாதிப்படைகிறது எனவும், நிரந்தர தீர்வு காணவேண்டும் என கோரிக்கை வைத்தனர். புவனகிரி ஊழல் எதிர்ப்பு இயக்க தலைவர் குணசேகரன், விவசாய சங்கத் தலைவர் ரவீந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


பின்னர் புவனகிரி தாலுகா அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ககன்தீப் சிங் பேடி, தன்னார்வலர்களுக்கு லைப் ஜாக்கிட் வழங்கினார். தாசில்தார் சத்யன், மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மோகன்ராஜ், செயல் அலுவலர் திருஞானசம்பந்தம் உடனிருந்தனர். பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், ' புவனகிரி ஆதிவராகநல்லுாரில் ஷட்டர் வசதியுடன் ரூ. 95 கோடி செலவில் தடுப்பணை கட்ட உள்ள இடத்தை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தேன். அந்த இடத்தில் தடுப்பணை கட்டாயம் தேவைப்படுகிறது.


அரிவாள் மூக்கு திட்டம்


தமிழக அரசு பட்ஜெட்டில் உள்ளது. கலெக்டர் விரைவில் நடவடிக்கை எடுப்பார். விருத்தாசலம் - பரங்கிப்பேட்டை சாலை அமைக்க டி.எஸ்.ஆர்.பி., திட்டத்தில், நவம்பர் மாதத்தில் டெண்டர் விடப்பட்டு பணிகள் விரைவில் துவங்கும். அதுவரை பேட்ஜ் ஒர்க் நடைபெறும்' என்றார்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X