சாலை விபத்தில் நகராட்சி ஊழியர் பலி | கடலூர் செய்திகள் | Dinamalar
சாலை விபத்தில் நகராட்சி ஊழியர் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 அக்
2019
00:30

நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பம் அருகே லாரி மோதியதில், கடலூர் நகராட்சி ஊழியர் இறந்தார்.பண்ருட்டி மணி நகரை சேர்ந்தவர் செல்வம்,54. கடலூர் நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். நேற்று மாலை 7 மணிக்கு நகராட்சியில் பணியை முடித்துக் கொண்டு, டிஎன் 31 பிஎஸ் 1242 எண்ணுள்ள ஹீரோ பேஷன் மோட்டார் சைக்கிளில் பண்ருட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.நெல்லிக்குப்பம் அடுத்த சுந்தரவாண்டி அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த டி என் 22 சி எப் 8652 எண்ணுள்ள லாரி செல்வம் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X