படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த ஆய்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2019
01:14

மடத்துக்குளம்:மக்காச்சோள சாகுபடியில், படைப்புழு தாக்குதல் கட்டுப்பாடு நடவடிக்கைகள் குறித்து, மடத்துக்குளம் பகுதியில், வேளாண் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.மடத்துக்குளம் புதிய ஆயக்கட்டு பகுதியில், 500 ஏக்கர் பரப்பில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் பயிர்களை படைபுழுக்கள் பாதித்துள்ளன.


இதனால், விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். இதை கட்டுப்படுத்த ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டாலும், 'மாஸ் ஸ்பிரே' எனப்படும், ஒரே நேரத்தில் அனைத்து விளைநிலங்களிலும் நோய் கட்டுப்படுத்தும் மருந்து தெளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதற்கான பூச்சிகொல்லி மருந்துகளை அரசே இலவசமாக வழங்குகிறது. இதற்காக, வேளாண்துறை மாவட்ட இணை இயக்குனர் மனோகரன், துணை இயக்குனர் வடிவேல் ஆகியோர் மடத்துக்குளம் தாலுகா பகுதியில் ஆய்வு செய்தனர்.வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி உடனிருந்தனர். வேடபட்டியில் தொடங்கி, மைவாடி, சாலரபட்டி உள்ளிட்ட பகுதி விளைநிலங்களில் சாகுபடியான மக்காசோள பயிர்களை பார்வையிட்டனர்.இணை இயக்குனர் மனோகரன் கூறியதாவது:மக்காச்சோள சாகுபடிக்கு, விவசாயிகள், ஒரே நேரத்தில் விதைப்பு செய்ய வேண்டும். பலநாட்கள் இடைவெளி விட்டு சாகுபடியில் ஈடுபட்டால் படைபுழு தாக்கம் ஏற்படும். இதை தடுக்க, ஒருகிலோ விதைக்கு, பெவேரியா பேசியானா, 10 கிராம் பயன்படுத்தி விதைநேர்த்தி செய்யலாம்.வயல் ஓரத்தில் தட்டைபயிறு, ஆமணக்கு, சூரிய காந்தி, சாமந்தி பூ விதைக்கவேண்டும். கடைசி உழவின் போது, தேவையான அடியுரத்துடன், ஏக்கருக்கு, 100 கிலோ வேப்பம்புண்ணாக்கு இட வேண்டும். ஏக்கருக்கு, 12 இடத்தில் இன கவர்ச்சி பொறி வைக்க வேண்டும். விதைத்த ஒரு வாரத்தில் ஒரு லிட்டர் நீருடன் அசாடிராக்டின் இரண்டு மில்லி கலந்து தெளித்தால், தாய் அந்துப்பூச்சிகள் பயிரில் முட்டையிடுவதை தடுக்கலாம். 'மெட்டாரைசியம் அனிசேபிலோ' என்ற பூஞ்சானத்தை இரண்டரை ஏக்கருக்கு நான்கு கிலோ தெளித்தால் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு, தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X