| துரத்தி கடிக்கும் தெருநாய்கள்: 10 பேருக்கு கடும் பாதிப்பு Dinamalar
துரத்தி கடிக்கும் தெருநாய்கள்: 10 பேருக்கு கடும் பாதிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 அக்
2019
01:55

ஊட்டி:ஊட்டி நகரில் சுற்றித்திரியும் தெருநாய்கள், 10 பேரை கடித்ததால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.ஊட்டி நகரில் குட்ெஷட் ரோடு, ஆஸ்பிட்டல் சந்திப்பு மற்றும் போலீஸ் குடியிருப்பு கீழ் பகுதிகளில் சமீப காலமாக ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன.இந்த நாய்கள் சாலையில் நடந்து செல்பவர்களை துரத்தி கடிக்கிறது. இரவில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களை துரத்தி செல்வதால் பலர் தடுமாறி விழுந்து காயமடைந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நாய் கடிக்கு, 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரவில், மாணவ, மாணவியர், குழந்தைகளை அழைத்து செல்ல பெற்றோர் அச்சப்படுகின்றனர்.தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என, மக்கள் நகராட்சியில் புகார் தெரிவித்துள்ளனர்.நகராட்சி கமிஷனர் நாராயணன் கூறுகையில், ''சம்மந்தப்பட்ட பகுதி மற்றும் நகரில் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X