பட்டினியில்லாத உலகிற்கான ஊட்டச்சத்து
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2019
01:57

கோத்தகிரி;கோத்தகிரியில் உலக உணவு தினத்தை ஒட்டி, 'பட்டினியில்லாத உலகிற்ககான ஊட்டச்சத்து' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.அக்கறை அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சியில், இயக்குனர் வினோபா தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் ஆசிரியர் ராஜூ பங்கேற்று பேசியதாவது:உணவு பழக்கம் சார்ந்த சர்க்கரை நோய், தற்போது அதிகளவில் பரவி வருகிறது. மக்களில் பலரும் உடல் எடையை குறைக்க வேண்டும் என, பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.ஆனால், சரியான உணவு விகிதம் என்பதை, அறிவியலால் வரையறுத்து கூற முடியவில்லை. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துடன், உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம். பசுமை புரட்சிக்கு பிறகு, விவசாயத்தில் ரசாயன பொருட்களின் சதவீதம் அதிகரித்து விட்டது.இதனால், நிலங்களிலும், நீர்நிலைகளிலும் ரசாயன பொருட்கள் கலந்து, உற்பத்தி செய்யப்படும் உணவு, விஷமாக மாறி வருகிறது. மேலும், துரித உணவுகள் மூலம், ஈயம், பாதரசம் உட்பட, ஒன்பது மெடல்கள் நமது உடலில் சேகரமாகிறது.உணவு பொருட்களில் உள்ள கலப்படம் காரணமாக, கல்லீரல், மூளை போன்ற உறுப்புகளை பாதித்து, புற்றுநோய் வரும் அபாயம் உள்ளது. இந்திய சுகாதார துறை மேற்கொண்ட ஆய்வில், நமது உணவு பொருட்களில், ஐந்தில் ஒரு பங்கு தரம் குறைந்தவை என தெரியவந்துள்ளது. இருப்பினும், பாரம்பரிய உணவை உட் கொண்டால் பல நோய்களில் இருந்து தப்பலாம். இவ்வாறு ராஜூ பேசினார்.இதில் அறக்கட்டளை நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர். முன்னதாக, அறக்கட்டளை கள அலுவலர் ரீனா வரவேற்றார். சுகுணா நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X