மாவட்ட வினாடி--வினா போட்டி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2019
01:57

கோத்தகிரி,:குன்னுார் கேத்தி சி.எஸ்.ஐ., பொறியியல் கல்லுாரியில், மாவட்ட அளவிலான வினாடி--வினா போட்டி நடந்தது.கல்லுாரி முதல்வர் ஜோஸ்வா ஞானசேகரன் போட்டியை துவக்கி வைத்தார்.ஊட்டி அரசு கலை கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில்,''நடப்பாண்டுக்கான நோபல் பரிசு பெற்ற வேதியியல் விஞ்ஞானியின் சாதனை மகத்தானது. நன்றாக புரிந்து படித்தால், ஒவ்வொரு மாணவரும் சிறந்த விஞ்ஞானியாக மாற முடியும்,'' என்றார்.இதில், துவக்கநிலை, நடுநிலை, இடைநிலை மற்றும் மேல்நிலை பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.கோத்தகிரி கடசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கூடலூர் அல்ஹிதா மெட்ரிக் பள்ளிகளுக்கு, சிறந்த அறிவியல் பள்ளிக்கான விருதும், கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் நல்லகுமார், பாலாடா என்.எஸ்.,ஐய்யா மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் குமார் மற்றும் ஓதனட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ரீனா ஆகியோருக்கு, சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதும் வழங்கப்பட்டது.கூடலூர் ஐடியல், ஜி.டி.எம்.ஓ. தேவாலா ஹோலி கிராஸ், குன்னூர் அறிஞர் அண்ணா மற்றும் கோத்தகிரி கிரீன்வேலி பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், முதல் இரண்டு இடங்களை பெற்று, நவ., மாதம் ஈரோட்டில் நடைபெறும், மண்டல போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர்.இதில், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜு, முன்னாள் தொடக்கக்கல்வி அலுவலர் பெள்ளி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மனோகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஆசிரியர் சங்கர் வரவேற்றார். பொருளாளர் ஆசிரியர் பரமேஸ்வரன் நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X