ஏரிகள் தூர்வாரும் பணி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2019
02:02

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், 10 கோடி ரூபாயில், 30 ஏரிகள் துார் வாரும் பணி நடக்கிறது. அப்பணி விபரங்களை, விவசாயிகளிடம், நீர் மேலாண்மை இயக்க தலைவர், நேரடியாக கேட்டறிந்தார்.திருவள்ளூர் மாவட்டம், ஆரணியாறு வடிநில கோட்டத்தில், 30 ஏரிகளில், 10.17 கோடி ரூபாய் மதிப்பில், குடிமராத்து பணி நடக்கிறது. ஏரி நீரை பயன்படுத்தும் விவசாயிகளே, முன்னின்று செயல்படுத்தி வருகின்றனர்.இப்பணிகளை, தமிழக நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்க தலைவர் சத்யகோபால், கலெக்டர் மகேஸ்வரியுடன் நேற்று பார்வையிட்டார்.கும்மிடிப்பூண்டி வட்டம், அரூர் கண்ணம்பாக்கம் ஏரி, 19 லட்சம் ரூபாய் மதிப்பில், 820 மீட்டர் நீளம் கரையை பலப்படுத்தி, ஒரு மதகு, இரண்டு கலங்கள் அமைக்கப்படுகின்றன. இதன் மூலம், 248 விவசாய நிலங்கள் பயன்பெறும்.ஏரி துார் வாரப்படுவதால், ஏற்கனவே உள்ள, 42.38 மில்லியன் கன அடியில் இருந்து, கூடுதலாக, 0.17 மில்லியன் கன அடி தண்ணீர் சேமிக்கப்படும்.அதேபோல், பணத்தம்பேடு கண்டிகை ஏரிக்கரை, 770 மீட்டர், இரண்டு மதகு மற்றும் ஒரு கலங்கல், 20 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்படுவதன் மூலம், 98.84 ஏக்கர் பாசன வசதி பெறும்.மேலும், ஏற்கனவே உள்ள, 7.06 மில்லியன் கன அடியில் இருந்து, கூடுதலாக, 0.12 மில்லியன் கன அடி சேமிக்கப்படும் என, பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.பின், இதை அதிகாரிகளிடம் கேட்டறிந்த, நீர் மேலாண்மை இயக்க தலைவர், பணிகள் விபரம், நெல் பயிர் விளைச்சல் போன்ற விபரங்களை, விவசாயிகளிடம் கலந்துரையாடி கேட்டறிந்தார்.அவருடன், பாலாறு வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் முத்தையா, செயற்பொறியாளர் ஆரணியாறு கோட்டம் ஜெயகுமாரி பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X