மாநகராட்சி மணலி துவக்கப் பள்ளிக்கு சபாஷ்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2019
02:13

மணலி: ஆங்கில வழி கல்வி, யோகா, 'ஸ்மார்ட்' வகுப்பறை, சிறுதானிய பிஸ்கட், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், 'சிசிடிவி' கேமராக்கள்... என, பிரமிக்க வைக்கிறது,



மணலியில் உள்ள, மாநகராட்சி துவக்கப்பள்ளி.அரசு பள்ளிகள் என்றவுடன், பாழடைந்த கட்டடம், உடைந்த குடிநீர் குழாய், முகம் சுழிக்க வைக்கும் கழிப்பறைகள், பற்றில்லாத மாணவர்கள், பிடிப்பில்லாத ஆசிரியர்கள் என்ற எண்ணம், பலருக்கும் தோன்றும்.




அதை மாற்றும் முயற்சிகள், தமிழகத்தில் ஆங்காங்கே நடக்கின்றன.பூ போன்ற மனம்எங்கள் மாநகராட்சி பள்ளிக்கு நிகரான, தனியார் பள்ளி உண்டா? என, கேட்கும் வகையில், பெருமிதத்தோடு செயல்படுகிறது, மணலி, பாடசாலை தெருவில் உள்ள, மாநகராட்சி துவக்கப் பள்ளி.மாணவர் சேர்க்கை வியூகம், உணவு திருவிழா, விளையாட்டு, அறிவியல் திறன், கணித திறன் போட்டிகள் என, தனியார் பள்ளிகளை திணறடிக்கும் வகையில், இப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், 'பட்டைய' கிளப்புகின்றனர்.




தமிழகத்தில் உள்ள, பல துவக்கப் பள்ளிகளில், 50க்கும் குறைவான மாணவர்களே படிக்கின்றனர் என்ற நிலையில், மணலியில், 811 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.கடந்த, 1932ல் துவங்கிய இப்பள்ளியில், புதிதாக துவங்கிய, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., மாணவர் சேர்க்கை உட்பட, 811 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.திருவள்ளூர் கல்வி மாவட்டத்திலேயே, அதிக மாணவர்களுடன் செயல்படும் இப்பள்ளியில், 20 ஆசிரியர்கள் உள்ளனர். 7.67 ஹெக்டர் பரப்பில், எட்டு கட்டடங்களில், 20 வகுப்பறைகள் உள்ளன.பள்ளியின் செயல்பாடுகள் குறித்து அறிய, தலைமை ஆசிரியை மகாலட்சுமியை அணுகினோம்.




ஸ்மார்ட் வகுப்பறைஅவர் கூறியதாவது:கல்வியை கற்க துவங்கும் மாணவர்கள், பூப்போன்ற மனம் படைத்தவர்கள். அவர்களை, இன்முகத்தோடு அணுக வேண்டும். மரியாதையாக பேசி, பழக வேண்டும். அவர்களின் பேச்சுக்கு மரியாதை கொடுத்து, செவி மடுக்க வேண்டும். நான், 1994ல், இப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி, 2011ல் பதவி உயர்வு பெற்று, தலைமை ஆசிரியராக உள்ளேன். 25 ஆண்டுகளுக்கு மேல், பணியாற்றி விட்டதால், ஊர் நிர்வாகிகள் முதல் முன்னாள் மாணவர்கள் வரை, அனைவரையும் நன்கு தெரியும்.'துளிர்' அமைப்பின் மூலம், 1 - 3 வகுப்பு மாணவர்களுக்கு, ஆன்லைனில், 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' கற்பிக்கப்படுகிறது. 4 மற்றும் 5 வகுப்பு மாணவர்களுக்கு, 'டாப்' வைத்து, கற்பிக்கும் முயற்சி பரிசீலனையில் உள்ளது.ஆங்கில வழி கல்வி, யோகா, நல்லொழுக்க பயிற்சி, ஸ்மார்ட் வகுப்பறை, ஸ்மார்ட் சீருடை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.மாணவர்களுக்கு, மூன்று நாட்கள், சிறுதானிய பிஸ்கட், இரண்டு நாட்கள், 'மில்க் ஷேக்' போன்றவையும் வழங்கப்படுகின்றன. மெதுவாக கற்கும் மாணவர்களுக்கு, இலகுவாக கற்பிக்க, தனியே இரு ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.




உதவிகரம்பாடல் வழியாக கற்பிக்கும் முறை, தமிழக அரசின் கல்வி சேனலை, மதிய நேரத்தில், மாணவர்களை சுழற்சி முறையில் பார்க்க செய்தல் போன்றவற்றையும் செயல்படுத்தி வருகிறோம்.விளையாட்டு, அறிவியல், ஆங்கிலம், கணிதத்திற்கான உபகரணங்கள், 4 - 5 வகுப்பு மாணவர்களுக்கு, பெஞ்சுகள்; 1 முதல் 3 வகுப்பு மாணவர்களுக்கு, தன்னார்வலர்கள் உதவியுடன், தனி நாற்காலியுடன் கூடிய பெஞ்சுகள் அமைக்கப்பட உள்ளன.பள்ளி வளாகத்தில், ஐந்து, 'சிசிடிவி' கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.




உணவு திருவிழா, தலைவர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் என, குதுாகலமான சூழலுடன், பள்ளி இயங்கி வருகிறது.இப்பள்ளியின் வளர்ச்சிக்கு, தன்னார்வலர்கள், முன்னாள் மாணவர்கள் மட்டுமின்றி பிரபல நிறுவனங்கள் உதவிகரம் நீட்டி வருகின்றன. எதிர்காலத்தில், டிஜிட்டல் வகுப்புகள், கூடுதல் கட்டடங்கள், சிசிடிவி, மூலிகை தோட்டம் உள்ளிட்ட பல திட்டமிடல் உள்ளதுஇவ்வாறு, அவர் கூறினார்.இப்பள்ளியின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் அனைவருக்கும், 'சபாஷ்' கூறி, கிளம்பினோம்.


 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopi - Chennai,இந்தியா
18-அக்-201917:57:44 IST Report Abuse
Gopi மனமார்ந்த பாராட்டுக்கள் . உங்கள் திட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X